ஒரு நதி போல வேர்களில் ஒட்டியிருக்கும் மண்ணையும் பூக்களில் படிந்திருக்கும் வாசத்தையும் வருடிக்கொண்டே நடக்கிறது என் வாழ்க்கை!
என் டைரியின் பக்கங்களை மிகப்பழைய நாட்களுக்குத் திருப்புகிறேன். மங்கலான காட்சிகள் விரிகின்றன.
ஒரு ட்ரங்கு பெட்டி, ஒரு மூட்டை சாமான்கள் இவற்றோடு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் பல இளஞ்ஜோடிகள் பலபல ஊர்களில் கூடுகளைவிட்டு குடிபெயர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், .
பண்டக சாலை நிறுவனத்தில் என் தந்தை, என் அம்மாவும் வாழ்க்கையின் பற்சக்கரத்தை சுழற்ற ஆரம்பித்த நேரம்!
என்னோடு என் கனவுகளோடு கைகுலுக்க முடியாத பொழுதுகளில் என் குழந்தைப்பருவ துள்ளல்களை ஆசைகளை ஏக்கங்களை ஆசிர்வதித்தவர் பெத்தாட்டும்மா
என் இரண்டு வயது இதயத்திற்குள் நிரம்பி வழிந்த தனிமையை ஒரு குதூகல நந்தவனமாய் தினந்தோறும் மாற்றியவர் பெத்தாட்டும்மா.
அவரைப்போன்ற ஒரு அரிய ஜீவனை இந்த பொருளாதாரத்திற்கு அலைபாயும் பொழுதுபோக்கு உலகில் நான் கண்டதே இல்லை
படிப்பார்வம் பல்கிப் பெருகியதைக் கண்டு பள்ளியில் நான் படித்து பட்டம் பெறுவதைவிட உலகப்படிப்பை நான் படிக்க ஆரம்பித்தில் என் தந்தை மிக மகிழ்ந்து நெகிழ்ந்துபோனார்.
உடைத்தெறிந்த போது கொஞ்சமும் கலங்காமல் என்னை அரவணைத்து அடிபடும் கல் சிலையாகும், அடிபடாத கல் எல்லோரும் மிதிக்கும் படியாகும் என்று திடமும் தன்னம்பிக்கையும் டன் கணக்கில் எனக்கு அள்ளிக் கொடுத்தவர் என் அப்பா!
ஆரம்பப் பள்ளி தொடக்கி பதினொன்று பனிரெண்டாம் வகுப்புகளில் எனக்கு அமைந்த ஆசிரியர் பெருமக்கள் மிகவும் அன்பிற்குரியவர்கள்.
ஆரம்பப் பள்ளி தொடக்கி பதினொன்று பனிரெண்டாம் வகுப்புகளில் எனக்கு அமைந்த ஆசிரியர் பெருமக்கள் மிகவும் அன்பிற்குரியவர்கள்.
என் ஞாபகப் பக்கங்களை திருப்பிக் கொண்டே வரும்போது, உணர முடிகிற உண்மை ஒன்று உண்டு.
போராடாமல் வாழ்க்கை இல்லை, நான் போராடாத நாட்கள் இல்லை. போராட்டங்கள் எனக்குப் பழகி விட்டது. போராட எனக்குப் பிடிக்கிறது.
தொடரும் என் போராட்டங்கள் உங்கள் அன்போடு!
ஸலாம் உஸ்மான்..
பதிலளிநீக்குஎழுத்தில் நல்ல நடை. வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுதுங்கள்...அந்த மூணாவது போட்டோ எந்த தெரு?
நமது அக்ரகாரம் (பஸ் ஸ்டாப் அருகே )பழைய போட்டோ
நீக்குஅந்த வீடு லாரி ஆபீஸ் காரி வீடு
மிக்க நன்றி மசூது,சாஹிப்
பதிலளிநீக்குமனம் விட்டு பாராட்டுவதற்கும் நல்ல மனசு
வேண்டும் அந்த மனசு உங்களிடம் உள்ளது
மிக்க நன்றி
அடிக்கடி கருத்துக்களை பதிவு செய்யுங்கள்