பிச்சினிக்காடு இளங்கோ
(பத்து கவிதைத்தொகுப்புகள் வந்திருக்கின்றன.
திருச்சி அனைத்திந்திய வானொலியிலும், சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழகத்திலும் பணியாற்றியவர்.
சிங்கைச்சுடரின் முன்னாள் ஆசிரியர்..MDIS-என்கிற கல்விநிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
வேளாண்மைப்பட்டதாரி)
எல்லோரும் இருக்கிறார்கள்
இங்கே
இங்கேயே அவர்கள்
எங்கேயோ இருக்கிறார்கள்
எதிரில் இருக்கிறார்கள்
எனினும்
எதிரிலும் இல்லை
எதிரியாகவும் இல்லை
இது
இன்றைக்கு
எல்லைகள் கடந்த நிலை
எல்லா நாட்டிலும்
இதுதான் நிலை
கைப்பேசி
கையடக்கக்கணினி
பண்பலை வானொலி
காரணங்கள்
தோற்றமாயையோடுதான்
தொடர்கிறது வாழ்க்கை
சுருக்கமாய்ச்சொன்னால்
இசைபடவாழ்கிறார்கள்
பயணத்தில் இருக்கிறார்கள்
எனினும்
அவர்கள்
இன்னொரு பயணத்தில் இருகிறார்கள்
பேருந்தில்
ஏறும்போதும்
இறங்கும்போதும்
பயண அட்டையைத்
தேடுவதைவைத்துத்தான்
தெளிவானது முடிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக