புதன், 30 மே, 2012

இரங்கற்ப்பா


அன்பு நண்பர்களீர்
அஸ்ஸலாமு அலைக்கும்

மேலகட்சி தலைவரும் லெப்பை சாஹிப் முஸ்லீம் ஜமாதினுடை  தலைவரும் ,நைனா முகமது பெரிய குத்துப பள்ளி முத்தவல்லியுமான  பாசமிகு அண்ணன் ஜனாப் மவுலான மவுலவி O.M.S.அப்துல் பாசித் சாஹிப் அவர்கள் இன்று இரவு சுமார 7.15 மணியளவில் வபாதனார்கள் உடல் நலக் குறைவால் சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள்.இந்நிலையில் இன்று இரவு சுமார் 7.15  மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.ஜமாத்தார்கள் அனைவரும் அன்னாரின் மக்பிரதிற்காக துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
தானும் மகிழ்ந்து தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் தாம் சந்திக்கும் துன்பங்களையும் வெல்லக்கூடிய மனப்பக்குவத்தை பெற்றிருப்பர். அதுமட்டுமல்ல எத்தகைய துன்ப நிகழ்வையும் இன்பமாக மாற்றிக் கொள்ளும் பயிற்சியையும் துன்பத்தை இன்பமாக்கிக்கொள்வதற்கான பல தெரிவுகளை நாடிச்செல்லும் திறமையையும் பெற்றிருப்பர் என்பது பாசமிகு அண்ணன் மர்ஹும் அப்துல் பாசித் சாஹிப் அவர்களின் வாழ்க்கை நமக்கு இட்டுசென்ற பாடம் பரந்தமனப்பான்மை கொண்ட அவர்களின்  மனதில் எப்போதும் மகிழ்ச்சியிருக்;கும் அவர்களோடு பழகுபவர்களும் ஓர் பாதுகாப்பான வட்டத்துக்குள் வாழ்கின்ற உணர்வை அனுபவிப்பார்கள். சாதாரணமாக மற்றவர்களுடன் ஒத்துப்போகாதவர்கள்கூட இவர்களோடு சுலபமாக இணைந்து கொள்வார்கள். அண்ணன் பாசித் அவர்களின் மறைவு எல்லோருக்கும் ஒரு இழப்பாகும். பெரிய தெரு மேல வட்டாரத்தில்  ஒரு கம்பீரத்தோடு தொழுகைக்காக நடந்து செல்லும் ஒரு நல்ல உள்ளத்தின் எண்ணிக்கையில் ஓன்று குறைந்து விட்டது.அன்னாரின் மறுமை வாழ்விற்கு பிரார்த்தனை செய்வோமாக.
   இப்போதெல்லாம் மனிதர்கள் தமது சகமனிதர்களின் உறவுகளை நேசத்தை பாசத்தை புறக்கணிப்பதால் அவர்கள் வெறுமைக்குள் வாழ்வதை காணக்கூடியதாகவிருக்கின்றது. அதுமட்டுமல்ல இன்றைய காலத்தில் பிரிவு ஏக்கம் போன்ற உணர்வுகளை அனுபவிக்காத காரணத்தாலோ என்னவோ தொடர்ந்து சேர்ந்திருப்பது போன்ற உணர்வும் தொடர்ந்து சந்தித்துக் கொள்வது போன்ற உணர்வும் அதிகரிப்பதினால் மிக விரைவில் உறவுகளிற்கிடையில் சலிப்புத் தட்டுகின்ற தன்மையும் ஏற்படுகின்றது.
       பலரது அறிமுகம் கிடைத்திருக்கலாம். பலரோடு ஆழமான உறவும் இருந்திருக்கலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த உறவு மிக முக்கியமானதாகக்கூட இருந்திருக்கும். ஆனால் காலமாற்றத்தோடு, இடமாற்றத்தோடு, நிலை மாற்றத்தோடு அந்த உறவுகள்கூட கடந்தகால அறிமுகமாக போய்விடுகின்றன. அந்தந்த நேரங்களில் நம்மைச் சுற்றியிருக்கும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கையில்
சிலர் அச்சம் காரணமாக பல வட்டங்களை தம்மைச்சுற்றி உருவாக்கி தம்மை கட்டுப்படுத்திக் கொள்கின்றனர். சிலர் எல்லைகளை விரிவாக்கி உயர உயரச் சென்று கொண்டிருக்கின்றனர். இருப்பது போதும் இதில் நிம்மதியடைவோமென்று சோம்பலுடன் இருப்பவர்கள் வாழ்க்கையை வாழவில்லையென்றே அர்த்தப்படும். அவர்கள் ஏதோ இருந்துவிட்டுப் போகின்றார்கள்.
கருவறையிலிருந்து தேடல் ஆரம்பிக்கின்றது. பிறந்தவுடன் குழந்தை தாயின்மடியை தேடுகிறது. தேடலின்போது அன்பு, பாசம் போன்றவை ஊட்டப்படுகின்றது. பின்பு இளமைக் காலங்களில் நட்பு, காதல் போன்ற உறவுகளை தேடுகின்றான். அவற்றை அனுபவித்து உலகை புரிந்து கொள்ள முயற்சிக்கின்றான். அப்போது வெற்றி தோல்விகளையும்; கோபம், பொறாமை, வலி போன்றவற்றையும் உணர்ந்து கொள்கிறான். பின் இருத்தலுக்காக பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக தனக்கென வேலையைத் தேடுகின்றான். இறுதியில் உலகத்தைப் புரிந்து கொண்டு மாற்றங்களை அனுசரித்து அமைதியைத்தேடி வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்றான். இவை அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது.
 
மனிதனின் ஆளுமையென்பது இவையெல்லாவற்றையும் அடக்கியதுதான். புறத்தோற்றம் அகத்தோற்றம் இரண்டுமே மேம்பட்டிருப்பவர்கள்தான் ஆளுமைமிக்க மனிதர்களாவர். அகத்தில் அன்பும் குறையாத கருணையும் இருப்பவர்கள்தான் புறத்திலும் அழகாக இருக்கமுடியும். வெளிப்பூச்சில் அழகை தக்கவைத்துக் கொள்பவர்களது வேஷம் சிறிது நேர பழக்கத்தில் வெளிப்பட்டுவிடும்.
விரக்தியும் நம்பிக்கையும் மாறிமாறி வருவதுதான் வாழ்க்கை. பரந்த வானத்திற்கு கீழ் எத்தனை ஐPவராசிகள். ஒவ்வொன்றுமே எமது வாழ்க்கையோடு ஏதோவகையில் இணைக்கப்பட்டவை. அவற்றிலிருந்து நாமும் எம்மிலிருந்து அவையும் ஏதாவதொன்றை பெற்றுக் கொள்ளும் வண்ணம் வாழப் பழகிக் கொண்டால் எதுவுமே சாத்தியம்தான். அந்த வகையில்
அண்ணன் அப்துல் பாசித் அவர்கள் புன்னகை மன்னனாகவே  இருந்திருக்கிறார்கள். எத்தனை வழக்குகள் எத்தனை பிணக்குகள்
அத்தனையும் சாதித்தது அவரது வெற்றிப் புன்னகை.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். நண்பர்கள்
அனைவரும் அன்னாரின் மக்பிரதிற்காக துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
உங்களுடன் சேர்ந்து அன்னாரின் மக்பிரதுக்காக
நானும் து ஆச் செய்கிறேன்.
"நீதி மட்டும் தூங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு"
கணக்கும் இதயத்துடன்
நல்லூர் உஸ்மான்
"வந்த மண்ணிலிருந்து சொந்த மண் நோக்கும் மனசு"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக