(எனது சக பணியாளரும் ,
நிறுவனத்தின் லாஜிஸ்டிக் உதவி
மேலாளருமான ஜனாப் அசைனா மசூத்
பணி நிறைவு பெற்று
சென்ற வாரம் தாயகம் திரும்பினார்கள்
அவர்களுக்கான வாழ்த்துக் கவிதை )
கம்பெனிக்கு
பணிவிடை செய்த உங்களுக்கு
"பணி" விடை கொடுத்திருக்கிறது.
நட்பு என்னும்
படகில் நிண்ட துரம் பயணித்தோம்
இடையால் விரசல் ஏற்பட்டாலும்
... படகின் வேகம் குறையவில்லை
ஆனால் இன்று
நாம் தனியாக பயணம் செய்ய
போகிறோம்
பயணம் மட்டுமே தனியாக
பயணித்த நினைவுகள் நிழலாக....
உங்கள்
பயணம் இனிமையாக
ஆண்டவனை வேண்டுகிறேன்..
பிரியும்
தருணத்தில் வழியனுப்ப
மனமில்லாமல்
பேசுவதற்கு வார்த்தைகள்
இல்லாமல்
நான் தவித்து நின்றேன்
நீங்கள்
நீங்கிய இடத்தை வெறுமை நிரப்புகிறது!
என்றும் உங்கள்
நட்பை எதிர்பார்கும்
நல்லூர் உஸ்மான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக