வியாழன், 27 டிசம்பர், 2012

தேவனவன் திருக்கொடையே

ஆதிரையில் வந்தவளே!
ஆண்டவனின் மறுவுருவே!
மார்கழியில் பிறந்தவளே!
மார்கொடுத்து வளர்த்தவளே!
தேர்ந்தெடுக்கா நற்பேறே!
தேவனவன் திருக்கொடையே!
பேர்கொடுத்து மகிழ்ந்தவளே!
பெற்ற மகன் எனநெகிழ்ந்தவளே!
சோர்வுடனே தானிருந்தும்
சுகமெனக்கு விழைந்தவளே!
நீர்குடித்துப் பாற்சோறு
நிதமெனக்குத் தந்தவளே!
சீர்கொடுத்துச் சினந்தாங்கிச்
செய்தபிழை மறந்தவளே!
யார்கழித்துப் பேசிடினும்
எனைஉயர்த்தி நின்றவளே!
வேர்எனவே எனைப்பிடித்து
வெளித்தெரியா திருப்பவளே!
ஊர்தெரியச் சந்திரனாய்
உள்ளழுது வாழ்பவளே!
சார்ந்திருக்க மறுத்தவனின்
சரித்திரத்தின் முதலெழுத்தே!
தீர்ந்தெனது நாள்முடிந்து
தேவனிடம் சேருகையில்
நேர்ந்திடப்போம் தண்டனையை
நீகுறைக்க வேண்டம்மா!
சிலபொழுது இடிமின்னல் பலபொழுது அடைமழை,
அனைத்தினிலும் உன் நினைவில் அழுதிடுவேன் தாயே,
பகல்கனவு பணவரவு புத்தாடை,
எல்லாமே உனக்கடுத்த நிலைகளில்தான் தாயே,
எப்போதும் ஒரு சீற்றம் முப்போதும் முகவாட்டம்,
முன்னேறும் மூர்க்கம் எனுல் உன்னாலே தாயே,
தற்போது வீழ்ந்தநிலை எனக்கேது சோர்ந்தநிலை,
உனக்கேது தோல்விகள் எனச்சொல்லும் தாயே,
தற்காலம் முடிந்துவிடும் பொற்காலம் துவங்கிவிடும்,
நிற்காத புரவிதனில் உட்கார்வேன் தாயே ,
சிற்றோடை சில்லிடவும் காட்டருவி கண்படவும்,
பெரும்வெற்றி தனைத்தாங்கி விரைந்திடுவேன் தாயே,
உண்மைடியே நிரந்தரம் வேறேது சுதந்திரம்,
எந்நாளும் நீதானே என் புதையல் தாயே,
உனக்காக வாழ்வதும் அதற்காக சாவதும்,
நான் கொண்ட பிறவியின் பயன் பெருமை தாயே

எல்லா பிள்ளைகளின் சார்பிலும்
http://www.youtube.com/watch?v=IRbe-UqeEzU
நல்லூர் உஸ்மான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக