சனி, 26 ஏப்ரல், 2014

வலிமையின் தளர்வுகள்

"உலகம் படைக்கப்    பட்ட நாளில் இருந்து காலத்தின் கணக்குகள் ஆரம்பமாகின்றன.

"ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்பட்ட அவனது ஜீவிய காலம் மிக பெறுமதியானது.

"வாழ்க்கையின் அடுத்த நகர்வை நோக்கி செல்லும் பரீட்சையில், அவனுக்கு வழங்கப் பட்ட காலத்தில் அவனுக்கு எதுவித அதிகாரமும் வழங்கப் பட வில்லை என்பதே வேதனையான நிஜம்.

"பாவம்.

"மனிதன் அதனைப் புரிந்துக் கொள்ளவில்லை.

"என்றாலும், செயல் சுதந்திரம் அவனுக்கு முற்றாக வழங்கப் பட்டிருப்பதாக அவன் தப்புக் கணக்குப் போட்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.

"அவன் நன்மை செய்யலாம். அல்லது தீமை செய்யலாம்.அல்லது ஒன்றுமே செய்யாமல் வெறுமனே இருக்கலாம்.

"அவன் செயல் பட்டாலும் அல்லது செயல் படாமல் இருந்தாலும் காலம் நகர்ந்துக் கொண்டே இருக்கும்

"எது எப்படி இருந்தாலும் இழந்து போன காலத்தை மட்டும் எந்த மனிதனாலும் மீளப் பெற முடியாது.

"உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களின்  மீதும் காலத்துக்கு ஒரு அதிகாரம் இருக்கிறது.

"அரசனானாலும், ஆண்டியானாலும் காலத்துக்கு மாறாக எதுவுமே செய்ய  முடியாது.

"கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

"காலத்தின் முதலாவது ஆளுமை பருவ  காலங்களில் தொடங்குகிறது.

"வெயில்  காலம், மழை காலம்,  வசந்த காலம், பனிக் காலம் என இந்த உலகில் காலம் செல்வாக்கு செலுத்துகிறது.

"குளிர் காலத்தின் குளிரில் இருந்து தப்பவும், வெயில் காலத்தில் அதன் வெம்மையில் இருந்து தப்பவும் நாம் படும் பிரயத்தனங்கள் பல.

"பகல் காலம் வந்தால் இருள் இல்லை. இருள் வந்தால் பகல் இல்லை.

"மனித வாழ்வில் கூட குழந்தை,இளைஞன், வாலிபன், முதியவன், வயோதிகன், தளர்ந்து போன கிழவன் என காலம்  நம்மில் செல்வாக்கு செலுத்துகிறது.

"மனிதனால் காலத்தின் கோலத்தால் நடை பெறுகின்ற இந்த மாறுதல்களை தடுத்துக் கொள்ள முடியாது.

"அதேபோல, தான் விரும்பிய ஒரு நிலையில் தொடர்ந்து நிலைத்து இருக்கவும் முடியாது.

"எனவே,  மனிதன் நல்ல பிள்ளையாக காலத்துக்கு இணங்கி நடக்க வேண்டுமே தவிர  அவனது இணக்கத்துக்கு காலத்தை அவனால் கட்டுப் படுத்த முடியாது.

"மனிதன் நினைத்த அனைத்தையும் செய்யும் செயல் சுதந்திரத்தை இறைவன் ஒருபோதும் மனிதனுக்கு வழங்க வில்லை என்பதே உண்மை."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக