செவ்வாய், 3 மே, 2016

தந்திர தேசத்து மந்திர வாசகம்



நிரந்தரத் தலைவராய்
நீடித்து நிற்பவரின்...
தந்திர தேசத்து
மந்திர வாசகம் இதுதானோ?

கூட்டணி சேர்க்கை
கூப்பாடு ஒருபுறம்!
பாதிக்கு பாதி
பங்கீடு மறுபுறம்

பத்தாண்டுக்கு ஒருமுறை
தந்திரத்தை மாற்றுவது
போதாது! பலிக்காது!
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
ஐயமின்றி மாற்றுபவரே!

வெற்றித் தலைவராய்
வெளிச்சத்துக்கு வருவார்!



புதுவை வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக