வெள்ளி, 22 நவம்பர், 2013

என் வருத்தத்தை என் வறுமை வென்றுவிட்டது..!


என் வருத்தத்தை
என் வறுமை வென்றுவிட்டது..!


வேலை ஆனால் அது வெளியூரில்  

ஒரு
சந்தோசத்தை துக்கமாக
கொண்டாடும்
நிலையில் நிற்கிறேன் நான்..

எனக்கு
வேலை கிடைத்த
இடம் ஒரு பெரிய நகரம்..

ஆனால்

எங்கே
அது நரகமாக
மாறிவிடுமோ என்று
என்
மனம் நகர மறுக்கிறது..

தெரிந்தவர்களிடம்
அந்த
ஊரை பற்றி
கொஞ்சம் தெளிவாக கேட்ட
ஆசை வந்தது..

ஒருவர் சொன்னார்
அங்கே
புல் கூட
புதியதாய் முளைக்காது ..

ஐயோ..!

என்
வீ ட்டில்
சுவர் கூட
சும்மா
இருக்க வேண்டாம் என்று
செடி வளர்க்குமே....

ஒருவர் சொன்னார்
அங்கே
நல்ல
மனிதர்கள்
மதிக்கப்படமாட்டர்கள்...

ஐயோ..!

என்
வீ ட்டு
நாய்க்குட்டி கூட
நன்றியும்
நல்ல மனமும் உண்டு
நான்
எப்படி அங்கு
வாழபோகிறேன்...

எல்லாம்
கேட்ட பின்பு..

அம்மா
சொல்கிறாள்..

அப்பா
உடல் நலம் இல்லை ..

தங்கை
திருமணம் தடைபடுகிறது..

தம்பி
படிப்பு பாதிலே நிற்கிறது ..

வேலைக்கு
போ மகனே ..
நம்
வீட்டில்
அரிசி கூட
ஐந்து கிலோ மீதி இருக்கிறது...!

என் வருத்தத்தை
என் வறுமை வென்றுவிட்டது..!

இதோ
இப்போதே புறபடுகிறேன்...!

2 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் படைப்புகள் அருமை ,
    தங்களின் வரிகளில் உதித்த தலைமைத்துவம் என்ற பிரசுரத்தை மீண்டும் வெளியீடு மாறும் வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு