வியாழன், 22 மே, 2014

கால நதியின் ஓட்டம்


கடலுக்கு அப்பாலிருந்து ஒரு கணக்கும் குரல் 

கடந்து போன காலங்கள் யாவும் கறை படிந்த அத்தியாயங்களையே எமக்குப் படிப்பினைகளாக விட்டுச்சென்றுள்ளன. யுத்தமும் யுத்தத்தின் வடுக்களும்
மரண அச்சுறுத்தலும் விரும்பியபடி பேசவும் எழுதவும் நடமாடவும் முடியாத சுதந்திரமற்ற சூழலும் எமது மக்கள்மீது பாரிய மனித உரிமை மீறல்களாக சுமத்தப்பட்டிருந்தன.
இதன் காரணமாகவே தவிர்க்க முடியாத காலச்சூழல் ஒன்றில் நீங்களும் எமது தேசத்தை விட்டு புலம்பெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாயங்கள் நிகழ்ந்தன.
 
ஒரு காலம் இருந்தது. புலம்பெயர்ந்து போனவர்கள் யாவரும் நாடு துறந்து ஓடிப்போன துரோகிகள் என்று தூற்றப்பட்டார்கள். தனிநாடு கிடைத்தால் இங்கு நாட்டை விட்டு ஓடிப்போனவர்களுக்கு அனுமதி இல்லை என்று முற்கூட்டியே தீர்ப்பு எழுதப்பட்டது.
கால நதியின் ஓட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. கறை படிந்து போன கடந்த இரு தசாப்தங்களின் அனுபவங்களோடு எமது வரலாற்றை எழுதிச்செல்லும் காலநதியானது இப்போது வேறுதிசை வழியில் முழுமையாகவே திருப்பட்டிருக்கின்றது.
ஆனாலும் யாரும் நினைத்தது போல் இங்கு எதுவும் நடந்திருக்கவில்லை. அதே புலம்பெயர்ந்து போன எமது உறவுகளிடம் இருந்து பெற்ற நிதிதான் ஆயுதப்போராட்டம் என்று புலிகளின் தலைமையால் சொல்லப்பட்ட அழிவு யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
 
அழிவு யுத்தம் என்பது இருந்தவைகள் எல்லாவற்றையும் எம்மிடம் இருந்து பிரித்துச்சென்று விட்டது. எமது மண்ணின் வளங்களை அழித்து சிதைத்து சென்று விட்டது. எமது மனித வளங்களை கொன்று பலியாக்கி சென்று விட்டது. ஏஞ்சியுள்ள மனித உயிர்களையும் யுத்தத்தின் நெரிசலுக்குள் இருந்து தப்பி பிழைத்திருக்கும் குறைந்த பட்ச உடைமைகளையும் தவிர இங்கு எதுவுமே மிச்சமில்லை.
ஆனாலும் இருக்கின்றது என்று சொல்வதற்கு ஒன்றே ஒன்று மட்டும் தாராளமாக மிச்சமிருக்கின்றது. அது எமது நம்பிக்கை மட்டும்தான். அதற்கென காத்திருக்கும்
நடை முறைச்சாத்தியமான வழிமுறை மட்டும்தான்.
 
எது இங்கு நிகழ்ந்தாலும், நாம் தோற்றுப்போனவர்கள் அல்ல! எமது இன சமூகம் தோற்றுப்போன மக்கள் சமூகமும் அல்ல. அதற்காகவே நாம் புலம்பெயர்ந்து போன உங்களது மீள் வருகையை நேசக்கரம் நீட்டி வரவேற்கின்றேன்.
 
நாங்கள் வாழ்வோம்! வாழ்வதற்காகவே வெல்வோம்! வெல்வதற்காகவே வாழ்வோம்! அதற்காக அளப்பரிய அர்ப்பணங்களை ஆற்றுவோம் என்ற நம்பிக்கையோடு நாம் உங்களோடு கைகுலுக்க விரும்புகின்றோம்.
 
கிடைக்கின்ற தனிநாட்டில் நாட்டை விட்டு ஓடிப்போனவர்களுக்கு அனுமதி இல்லை என்று யாருக்கு தீர்ப்பு எழுதப்பட்டதோ அந்த தீர்ப்பு எப்போதோ திருத்தி எழுதப்பட்டு விட்டது. இன்று புலம்பெயர்ந்த எமது உறவுகளான உங்கள் முகங்களை எமது தாயகத்தின் பக்கம் திருப்பாமல் வைத்திருந்தால் எமது மக்கள் தனித்து விடப்பட்டிருப்பார்கள்.
 
எமது மக்களையும் எமது வரலாற்று வாழ்விடங்களையும் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற விருப்பங்களும் மன வைராக்கியமும் எம்மிடம் இருக்கலாம். ஆனாலும் அதை ஈடு செய்ய முடிந்த பொருளாதார வலிமை என்பது புலம்பெயர்ந்த எமது உறவுகளாகிய உங்களிடமே உண்டு.
 
இது வரை காலமும் ஆக்கங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையோடு அழிவு யுத்தத்திற்கு அள்ளி வழங்கிய எமது புலம் பெயர் உறவுகளின் கைகளையும் பற்றிக்கொண்டு எமது தாயக தேசத்தின் பக்கம் ஆக்கத்தை நோக்கி அழைத்து வருமாறு உங்கடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்;.
 
புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து எமது தேசத்தின் அரசியல் நிகழ்வுகள் குறித்த உண்மைகளை அறிய முடியாத படி தவறான பாதைக்கு அழைத்து செல்லப்பட்வர்களான எமது இளைய சந்ததியினரின் கைகளையும் பற்றிக்கொண்டு எமது தாயக தேசதத்தின் பக்கம் அழைத்து வருமாறு உங்களிடம் நான் கேட்கின்றேன்.
எமது தேசத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்த வேண்டிய வரலாற்று கடமை என்பது உங்கள் கைகளிலேயே பிரதானமாக சுமத்தப்பட்டிருக்கின்றது.
 
அதற்காக அரசாங்கம் இந்த கடமையில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. அரசாங்கம் ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றத்தான் வேண்டும். அதையும் நாமே ஊக்குவிப்போம். ஆனாலும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளான நீங்கள் எமது தேசத்தின் அபிவிருத்தி குறித்து எதற்காக அக்கறை செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் சிந்தித்திருப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.
 
 
நாங்கள் அரசியல் உரிமையில் சம அந்தஸ்து கேட்கின்றோம். அரசியல் அதிகாரங்களில் பங்கு கேட்கின்றோம். அதே போல் பொருளாதார வளம் இருக்கின்றவர்கள் என்ற வகையில் எமது வரலாற்று வாழ்விடங்களின் அபிவிருத்தியிலும் நாம் ஏன் பாங்குதாரர்களாக இருக்க கூடாது என்பதுதான் எமது நியாமான கேள்வி!
அபிவிருத்தியில் பங்குதாரராக மாறுவதன் ஊடாக எமது வரலாற்று வாழ்விடங்கள் எமக்கே சொந்தம் என்ற  நியாத்தீர்ப்பை மேலும் நாங்கள் உறுதி செய்வோம்.
எம் இனிய உறவுகளே!
 
அரசியல் மக்களை பிரித்து வைத்திருக்கிறது�. பொருளாதாரம் மக்களை இணைக்கச்சொல்கிறது�. நாம் எமது பொருளாதார அபிவிருத்தியின் ஊடாக ஒன்றிணைந்த, முன்னேறிய ஒரு மக்கள் சமூகத்தை படைத்து காட்டுவோம்.
 
உயர் பாதுகாப்பு வலயங்களை நோக்கியும் யுத்தத்தினால் கைவிட்டு ஓடி வந்த எமது வாழ்விடங்களை நோக்கியும் எமது மக்களை மீள் குடியேற்றம் செய்ய வேண்டும்.
 
எமது மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளை துரித கதியில் தொடர வேண்டும்.
 
எமது மக்களுக்கான வாழ்வியல் மற்றும் பொருளாதார வளங்களை உருவாக்கி கொடுக்க வேண்டும்.
 
கைதுசெய்யப்பட்டும், சரணடைந்தும் இருக்கும் எமது மக்களின் பிள்ளைகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் வகையில் அவர்களின் துரிதமான விடுதலையின் பின்னர் அவர்களுக்கான தொழில் வாய்ப்பு அல்லது கல்வி வசதிகளை உருவாக்கி கொடுக்கப்படவேண்டும்.
 
காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை நியமிக்குமாறு நாம் எமது பத்து அம்ச கோரிக்கைகளில் ஒன்றாக ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களிடம் கேட்டிருக்கின்றோம். அதில் கண்டு பிடிக்கப்படுபவர்களையும் நாம் புனர்வாழ்வழித்து பாதுகாக்க வேண்டும்.
 
சுற்றுச்சூழலை பாதுகாத்து எமது மக்களின் வாழ்விடங்களை ஆராக்கியமான ஒரு பூமியாக மாற்றியமைத்து சுத்தம் என்பதே சொர்க்;கம் என்று கூறும் சுகாதார நலன்களை நாம் பேணி காக்க வேண்டும்.
 
குண்டு பட்டு, செல் விழுந்து பாழடைந்த எங்கள் பூமியெல்லாம் பசுந்தரைகளாக மாற வேண்டும். அங்கு காய்ந்த விறகை நட்டு வைத்தாலும் பச்சைப்பசேல் என எங்கும் முளை விட்டு செழிக்க வேண்டும்.
 
போக்கு வரத்து நீர்ப்பாபசனம் தொழி;ற்துறைகளை நவீன மயப்படுத்தி தேசிய பொருளாதாரத்தில் நாமும் பங்கெடுத்து தேசிய பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும்.
 
இல்லாமை என்பது இங்கு இல்லை என்ற நி;லை வேண்டும். எல்லோரும் உள்ளோர்கள் என்ற நிலை காண வேண்டும். அதற்காக அனைவருக்கும் வேலை வாய்ப்பு சுயதொழில் வாய்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
 
மனிதர்கள் யாவரும் சமன் என்றும் இங்கு யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்றும் கூறும் அளவிற்கு பொருளாதார வளங்களை சமப்படுத்த வேண்டும்.
 
உலக மயமாக்கலை காலச்சூழலுக்கு ஏற்றவாறு தந்திரோபாயமாக அனுசரிக்கவும் அதே நேரத்தில் உள்ளூர் உற்பத்திகளை பெருக்கி எமது தேசிய பொருளாதாரத்தை வளர்த்தெடுத்து உலக மயமாக்கலை எதிர் கொள்ளவும் வேண்டும்.
 
கிராமிய உற்பத்திகளையும் கைப்பணிகளையும் ஊக்குவித்து கிராமங்களை பொருளாதாரத்தில் முன்னிலைப்படுத்தவதோடு அரசியல் அதிகாரங்கள் கிராமங்களை நோக்கியும் நகர இடமளிக்க வேண்டும்.
 
இவ்வாறு இன்னும் நான் சொல்ல மறந்த வரலாற்று கடமைகள் பலவும் எமக்கு முன்பாக விரிந்து கிடக்கின்றன. இதில் உங்களால் எது சாத்தியமோ?... எது விருப்பமோ அவைகளை உங்களது சுயமான தீர்மானங்களால் நீங்களே உங்களது கைகளில் எடுத்து செயற்பட முன்வருமாறு உங்களுக்கு நான் எமது மக்களின் சார்பாக மனிதாபிமான வேண்டுகோள் விடுக்கின்றேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக