செவ்வாய், 8 ஜூலை, 2014

எல்லாமுமே வெளிச்சம் கொண்டு விளங்கும்

இனிய நண்பர்களே.அஸ்ஸலாமு அழைக்கும் 
வார்த்தைகளின் வலிமையால் சிகரம் தொடலாம். நான்காம்  வருடத்தின் தொடக்கத்தின் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்கிறேன். இடையில் ஏற்பட்ட சின்ன சின்ன மாற்றங்களாலும் ஏமாற்றங்களாலும். இந்த அமைப்பு தொடர்ந்து நடத்த முடியாத  சில தவறான முடிவுக்கு தள்ளப் பட்டது என்பதை நான் அறிவேன் . தொடரும் நல்லூர் குட் லாட்ஸ் பயணத்தோடு நீங்கள் உங்களை இணைத்து கொள்வீர்கள் என நம்புகிறேன். வளர்ந்து வரும் எல்லா அமைப்புகளுக்கு ஏற்படும் தொய்வு நிலைதான் இதற்கும் ஏற்பட்டுள்ளது பிரச்சினைகள் ஆராயப் பட்டு தீர்க்கப் படும் பட்சத்தில் ஒளிமயமான எதிர்காலம் இதற்க்கு உண்டு .எல்லாமுமே வெளிச்சம் கொண்டு விளங்கும்.



“உன்னை தோல்வி என்று அழைக்கும் தேட்டத்தோடு இங்கு பலர் இருப்பார்கள், அவர்கள் உன்னை தோற்றவன் எனச் சொல்லலாம். முட்டாள் என்று முந்திக் கொண்டு சொல்லலாம். நம்பிக்கையற்ற ஆன்மா என்று கூட சொல்ல முனையலாம். அதை நீ ஒருபோதும் உன்னை நோக்கி சொல்லிவிடாதே. அப்படிச் சொல்வாயாயின் நீ பிழையான சமிஞ்சையை மற்றவருக்கு வழங்குகிறாய். அதைத்தான் அவர்கள் பற்றிக் கொண்டு உன்னை அப்படி அழைக்க ஆர்வம் கொள்கின்றனர். புரிகிறதா உனக்கு?
எதைப் பற்றியாவது நீ தேவை கொண்டிருந்தால், அதற்காக உழை. சுவரில் போய் மோதுண்டால், அதைத் தள்ளிக் கொண்டு நகர முற்படு. டின்டின், தோல்வியைப் பற்றி நீ ஒரு விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும்: உன்னைத் தோற்கடித்துவிட தோல்விக்கு நீ இடம் தரக்கூடாது.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக