திங்கள், 25 ஜூன், 2012

ஊரெங்கும் டெங்கு காய்ச்சல் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
ஆனால் டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து உங்கள் வீட்டிலேயே இருக்கிறது என்கிறார் பிரபல ஆயுர்வேத மருத்துவரும், ஜெயேந்திரர் ஆயுர்வேதா கல்லூரியின் பேராசிரியருமான சுவாமிநாதன்.

வீட்டில் கிடைக்கக்கூடிய மூலிகை பொருட்கள் மூலமே இந்த ஆயுர்வேத த்டுப்பு மருந்தை தயார்படுத்திக்கொள்ளலாம்.
           
ஒரு கைப்பிடி அளவு கருந்துளசி எடுத்துக் கொள்ளுங்கள். கூடவே நான்கு மிளகும் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கொள்ளுங்கள். பின் வடிகட்டி காலை, மாலை என இருவேளை தொடர்ந்து குடித்து வாருங்கள் டெங்கு காய்ச்சல் மட்டுமல்ல, எந்த சுரமும் உங்களை அண்டாது. ஒருவாரம் தொடர்ந்து குடித்து வந்த பின், பிறகு வாரத்தில் இரண்டு நாள் என இந்த கசாயத்தை தொடர்ந்து குடிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டாலும் உங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆயுர்வேதா மருந்துக் கடைகளில், சீத ஜுராளி என்று ஒரு மாத்திரை கிடைக்கும் அதையும் வாங்கி சாப்பிட்டால் டெங்கு காய்ச்சல் வராது. கோ ரோசனாதி எனும் ஆயுர்வேதா மாத்திரையை வாங்கி சாப்பிட்டாலும் டெங்கு காய்ச்சல் போன்ற சீசன் காய்ச்சல்கள் அணுகாது, என்கிறார் மருத்துவர் சுவாமிநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக