அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே...அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அடித்தளத்தை எல்லாக் கட்சிகளுமே வழுவாக முதலீடு செய்து கொண்டிருக்கும் நேரம் இது.
சமீபத்தில்,இல்லை இல்லை நீண்ட காலமாகவே ஓட்டுக்கு பணம், பொருள்கள்,சாப்பாடு,சாராயம் என நீண்ட லஞ்ச வரலாறு நமக்கு தெரிந்த வரை தமிழகத்தில் உண்டு.ஒரு கட்சிக்காரர் வந்து எங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லி பணமோ,பொருளோ,அல்லது இன்னபிறவற்றையோ கொடுத்துச் சென்றால் மக்கள் அந்த நன்றியை தங்களது ஓட்டின் மூலம் செலுத்தி தங்களின் விசுவாசத்தை காட்டிவிடுவார்கள் என்பது அரசியல் வாதிகளின் நம்பிக்கை.அது ஓரளவுக்கு உண்மையானதும் கூட.
பாத்தீங்களா?...
ஓட்டுப்போட தயாராக இருக்கும் குடிமக்கள் சிலவற்றை சிந்திக்கவும்,அதன்படி முடிவு செய்யவும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.ஓட்டு என்பது ஜனநாயகம் நமக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமை.அதை ஸ்திரமாக பயன்படுத்தினால் நாடும் வீடும் சுபீட்சம் பெருவது உறுதி.
ஹைர்(நல்லது),,..போகட்டும்.காலங்காலமாக முஸ்லீம்களும் இம்மாதிரியான தேர்தல்களை சந்தித்துத்தான் வருகிறோம்.இஸ்லாமிய மக்களுக்கு பிரதான கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை தருவதும்,அதில் சில கிட்டியும்,பல கிட்டாமல் போவதும் பழகிப்போய்விட்ட ஒன்றாகிவிட்டது.
இஸ்லாமிய கட்சிகளும் காலாகாலமாக இல்லாமல் இல்லை.நல்லோர்கள் ஆரம்பித்த தலைசிறந்த கட்சிகள் எல்லாம் தன் சுயத்தை இழந்து இன்று திராவிட கட்சிகளின் அங்கமாகிப்போனது வருந்தத்தக்க செய்தி.அதனால் அவர்கள் இஸ்லாமியர்கள் மத்தியில் மதிப்பிழந்து போனதும் உண்மை.
அது தவிர,கடந்த 25 ஆண்டுகளில் குறிப்பாக தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இயக்கங்களை பல்வேறு காரணங்கள்,கொள்கைகள், தேவைகளை முன்னிறுத்தி முஸ்லீம்கள் கண்டுகொண்டனர்.அவையவை தனக்கென குறிப்பிட்ட உறுப்பினர்களை கைகொண்டு,ஒன்றையொன்று சாராமல்,தன் பாதையில் சென்று கொண்டிருக்க காண்கிறோம்.
வளச்சியடைந்த இயக்கங்கள்,தன்னை போன்ற சகோதர இயக்கத்தை திட்டித்தீர்ப்பதும்,வஞ்சிப்பதும்,கேவலப்படுத்துவதும்,காட்டிக்கொடுப்பதுமான அரசியலில் இறங்கிவிட,அதைக்கடந்து அவரவர் பலத்தை நிரூபிக்க அவர்கள் நிஜ அரசியலையும் நாடவேண்டியதானது.சிலர் நேரடியாக அரசியல்களம் காணவும்,சிலர் அரசியல் ஆதரவு தரவுமாக தத்தனது சக்தியை காட்ட முனைகிறார்கள்.
இப்படியாக முஸ்லீம்களின் நிலை இருக்க,இது எந்த வகையில் முஸ்லீம்களுக்கு நன்மை பயக்கும் என்றால்...யோசித்துப்பார்த்தால் எவ்வகையிலும் நன்மை என்பது துளியும் இல்லை.மாறாக பாதகங்கள் அதிகம் நம் பக்கம் வந்துகொண்டிருக்கிறது...
இத்தகைய பிரிவினைகளால் முஸ்லீம்களின் ஓட்டு சிதறிவிடுகிறது.சிதறிய ஓட்டுக்களை கட்சிகள் பிரித்துக் கொள்கின்றன.நமக்கு வெறும் கையை காட்டிவிடுகின்றன.இத்தகைய சூழலே நிகழவேண்டியே இந்த அரசியல்கட்சிகள் விரும்புகின்றன.அப்போதுதான் முஸ்லீம்கள் தனிப் பெரும்பான்மையை காட்டமுடியாது,அவ்வாறு அவர்கள் காட்டினால் அவர்களின் ஓட்டு கண்டிப்பாக நமக்கு இல்லாமல் ஆகிவிடும் என்பது அவர்களுக்கு தெரியும்.
ஆக நாம் கடக்க இருக்கும் இந்த தேர்தலில் முஸ்லீம்களான நமது பொறுப்புகள் என்ன என்பதை உணர்ந்து அதன்படி வாக்களிக்க கடமைப்பட்டுள்ளோம்.சமீபத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள்ள நமது சகோதரர்கள் நம்மிடம் ஆதரவு வேண்டி வந்திருந்தனர்.பின் அவர்களை நமது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.
அவர்கள் என்னப்பா இது,இப்படி ஆளாளுக்கு கட்சி ஆரம்பிச்சு அவன் அவன் தனித்தனியா கொடி புடிச்சுக்கிட்டு இருக்கீங்க..இதுல ஒருத்தர் ஒருத்தர தோக்கடிக்க சபதம் போட்டு வேர உழைக்கிறீங்க..இப்படி இருக்கைல,நா நம்ம சகோதரர்களுக்கு ஓட்டு போட்டு,எல்லா 5,10 ஓட்டுக்கள பிரிச்சு,யாருக்கு என்ன ஆகப்போகுது?..உங்களால முஸ்லீம்களுக்கு எந்த அரசியல் ஆதாயத்தையும் தரமுடியாது.முதல்ல,எல்லா இயக்கங்களையும் ஒன்னு சேருங்க..அப்ரம் எல்லா ஒன்னு சேந்து முழு ஆதரவோட களம் இறங்கினால் கண்டிப்பா வெற்றி கிடைக்கும்,அப்டீன்னார்.....இன்னும் நெரையாவே சொன்னார்..அதில் சில விதண்டாவாதங்களும் இருந்தன...
ஆனால் அவரது பேச்சை முழுமையாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.ம்ம்.நாமும் இப்போது வரை அனைத்து இயக்கங்களின் ஒற்றுமையை காண ஆவல்மீறியே உள்ளோம்..ஆனால் அது தற்போதைய சூழலில் எட்டாக் கனியாகவே இருக்கிறது.அதற்காக நாம் யாரோ வரட்டும் எப்படியோ போகட்டும் என இருந்திட முடியாதே..
சரி என்ன செய்யலாம்.அந்தந்த தொகுதியில் நிற்கும் நமது வேட்பாளர்களை முழு ஆதரவு கொடுத்து வெற்றி பெறச்செய்யுங்கள்.தமிழகத்தில் குறிப்பாக மமக மற்றும் SDPI கட்சிகள் முஸ்லீம்களின் தனி கட்சிகளாக உருவெடுத்துள்ள இந்த சூழலில் அவர்களை முழுவதுமாக ஆதரித்து வெற்றி காணச்செய்வோம்.
பின்னர் அவர்களது நடவடிக்கைகளை பொருத்து அவர்களுக்கான ஆதரவு தொடரலையும்,விலக்களையும் முடிவு செய்வோம்.ஒருவேலை இவர்களும் நாளை சராசரி அரசியல்வாதிகளாகிவிட்டால்,நாம் காலங்காலமாக கண்டுவந்த திராவிட கட்சிகளை விடவும் இவர்கள் நம்மை வஞ்சித்துவிட மாட்டார்கள்...அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அவர்களை முழுவதுமாக ஆதரிப்போம்..
இஸ்லாமியர்களை பொருத்தவரை ஓட்டுக்கு காசு என்பது ஒர்க் அவுட் ஆகாத சமாச்சாரம் என நம்புகிறேன்.அது கிராமப்புறங்களில் மட்டுமே வேலை செய்யும்.ஆதலால்,நாம் நமது எதிர்காலத்தின் பாதுகாப்பையும், உரிமைகளையும், பெற்றுக்கொள்ள நமது சகோதரர்களுக்கு ஆதரவை நல்குவோம்.முஸ்லீம்கள் யாரும் பிற மதத்தவரை வஞ்சித்துவிடுவது கிடையாது.அவர்களால் பிறமதத்தவர் ஒருபோது அச்சம் கொள்ளவும் தேவையில்லை.மாற்றத்தை விரும்பும் மக்கள் முஸ்லீம் வேட்பாளர்களை ஆதரிக்கலாம்.அவர்கள் ஒருபோது கைவிடப்பட மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை..
ஏனெனில் உடன்படிக்கை செய்துகொண்டவர்களின் ஒப்பந்தத்தை பரிபூரணமாக நிறைவேற்றுவது முஸ்லீம்களின் மீது கடமையான ஒன்று..ஆகவே நம்பலாம்..
காவிகளின் கரங்கள் நாடுமுழுவதும் விரவி,நமது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவரும் இந்தச் சூழலில் நாம் இப்படி இயக்க பேதங்களால் ஒற்றுமை இழந்து ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்பது.சிங்கமும் காளைகளும் கதையை நமக்கு நினைவுபடுத்துகிறது.முஸ்லீம்களை பொருத்தவரை,ஒன்றுபட்டால் மட்டுமே உண்டு வாழ்வு,ஒற்றுமை நீங்கிடின் நம் அனைவருக்கும் தாழ்வு என்பதை மனதில் கொள்வோம்.இயக்க பேதம் மறப்போம்.இனிய உறவு வளர்ப்போம்.
எனதருமை மாற்றுமத சகோதரர்களே,இந்தியாவில் 15% க்கும் குறைவாக இருக்கும் முஸ்லீம்கள் அத்துனை எளிதில் ஒன்றுபட்டுவிடப்போவதில்லை,அவர்களை ஒன்றுபட விஷமிகள் விடப்போவதும் இல்லை.முஸ்லீம்கள் ஒன்றுபட்டு யாரும் நாட்டை பிடித்துவிடப்போவதில்லை.அல்லது ஒன்றுபட்டுவிட்டால்,உங்களை வஞ்சித்துவிடுவதும் இல்லை.
எங்களது இப்படிப்பட்ட கோரிக்கைகள் யாவும் முஸ்லீம்கள் தங்களின் குறைந்த பட்ச பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள தேவையானவை. காவிகளால் நாம் நாடுமுழுவதும் கருவருக்கப்படுவதில் இருந்து எங்களை நாங்களே தற்காத்துக்கொள்ளும் குறைந்த பட்ச நடவடிக்கையின் வெளிப்பாடு.
மக்கள் பணத்தை வாரி இறைக்கும் கட்சிகளையும்,கர்வம் கொண்ட கவர்ச்சி கதாநாயகிகளையும்,காமெடி கதாநாயகர்களையும்,எந்த உத்திரவாதமும் இன்றி நம்பத்தயாராக இருக்கும் நாம்,நாளை அல்லாஹ்வின் கேள்விக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ள சகோதரர்களை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து ஆதரிப்போம்.இன்ஷா அல்லாஹ் ந்ல்லதே நடக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக