செவ்வாய், 25 நவம்பர், 2014

உன் பிரிவை எண்ணி எண்ணி ....!

 

 
 
பிரிவு
உன் நினைவின் தோரணையில்
என் மேல் அடுக்கு வானம்
சுழன்று கொண்டே போகிறதே
வரமா?
சாபமா?
ஒவ்வொரு நொடியும் ...!

பிரிவெனும் மெல்லிய வலையில்
சிக்கிக் கொண்டு உயிர்ப் புறா
துடிப்பதை நீ அறிவாயா?

சிக்கிய பிறகும் உன்
விழியம்புகளை வீசுகிறாய்
என் செய்வேன் ..?

எதற்கென்று அறியாத நான்
உடலும் மனமும்
ஏக்கக் குருதிகளோடு
உன் பிரிவை எண்ணி எண்ணி ....!

மூர்ச்சையாகி வலைக்குள்ளிருந்து
உள்ளேயும் வெளியேயும்
வர இயலாமல் தவிப்பதை
நீ அறிவாயா ..?

என்னை நானே சபித்துக் கொண்டு
வலை வீசியவனை சுடுகிறேன்
விழியம்பை அக்னியாக்கி
ஒவ்வொரு நொடியும்....!
 
 
Our Thanks To
http://eluthu.com/kavithai/222066.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக