- பழநிபாரதி
''ஒரு சின்னக் குழந்தை. நான்கு வயசுக் குழந்தை. பாவாடை முந்தானையில் சீடை கட்டிக்கொண்டு, படித்துறையில் உட்கார்ந்து காலைத் தண்ணீரில் விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறது. சின்னக் கால் காப்புகள் தண்ணீரிலிருந்து வெளிவரும் பொழுது ஓய்ந்து போன சூரிய கிரணம் அதன்மேல் கண் சிமிட்டும். அடுத்த நிமிஷம் கிரணத்திற்கு ஏமாற்றம். குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்றுவிடும். சூரியனாக இருந்தால் என்ன? குழந்தையின் பாதத் தூளிக்குத் தவம் கிடந்துதான் ஆக வேண்டும்.''
சாமியாரும் குழந்தையும் சீடையும் கதையில் புதுமைப்பித்தன் வருணித்த குழந்தைகளின் பாதங்களை இப்போது பார்க்க முடியவில்லை. பாலியல் வன்முறையில் அந்தப் பாதங்கள் முறிக்கப் படுகின்றன. அனாதைகளாக... பெற்றோர்களால் கைவிடப்பட்டுத் துரத்தப்படுகின்றன. குழந்தைத் தொழிலாளிகளாகத் துன்புறுத்தப்படுகின்றன. கடத்தப்படுகின்றன.
இந்தியக் குழந்தைகளின் மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேர் இப்படித்தான்...
2030 களில் மிகச் சிறிய சதவிகிதக் குழந்தைகள் மட்டுமே இந்தியாவில்
அடிப்படை வசதிகளோடும் பாதுகாப்போடும் வாழ முடியும் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.
அடிப்படை வசதிகளோடும் பாதுகாப்போடும் வாழ முடியும் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.
நேருவின் ரோஜா பூக்களில் ரத்தம் வழிகிறது...
நாம் யாருடைய குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறோம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக