சனி, 15 நவம்பர், 2014

வீட்டில் சூழ்ந்திருந்த சூனியம்!!


ஒருவர்க்கு இன்பம் தரும் நாள் மற்றவர்க்குத் துன்பம் தருவது மட்டுமல்லாமல் அவருக்கே ஒரு சமயம் இன்பம் தரும் நாள் மற்றொரு சமயம் துன்பம் தருகிறது என்பதைக் குறுந்தொகைப் பாடல் ஒன்று விளக்குகிறது.
  தலைவனும் தலைவியும் இல்லறம் ஏற்று அன்புடன் கூடி வாழ்கின்றனர். அப்பொழுது தலைவன், பிறர்க்கு ஈவதற்கும், தானும் தலைவியும், உற்றாரும் துய்ப்பதற்கு தேவையான பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரிந்து செல்ல நேர்கிறது. அப்பொழுது தலைவியிடம், ""கார்காலம் வருவதற்கு முன் வந்துவிடுகிறேன்'' என்று கூறிச் சென்றான்.
  தலைவனைப் பிரிந்த தலைவி அவன் பிரிவுத் துன்பத்தைத் தாங்காமல் வருந்தினாள். தலைவனின் பிரிவு தாளமுடியாத துன்பத்தைத் தந்ததால், அவன் பிரிந்து சென்று பல மாதங்கள் ஆனது போல் எண்ணினாள்.
தலைமகன் பிரிந்திருந்தபோது தலைமகள் தன் நெஞ்சிலுள்ளதைத் தோழியிடம் வெளிப்படுத்துகிறாள்.
தன் நெஞ்சுக்குச் சொல்கிறாள். நெஞ்சே! இங்கு இருந்தது போதும். அவர் சென்றுள்ள நாட்டை இனி வழிபடு. (அந்த நாடு அவரைக் காப்பாற்றட்டும்) சங்கை அறுத்துச் செய்த வளையல்கள் நழுவுகின்றன. ஒவ்வொரு நாளும் கண்கள் தூங்கவில்லை. இவற்றையே எண்ணிப் புலம்பியது போதும். இனி புறப்படு. அவர் சென்றுள்ள நாட்டை வழிபடு.
இது குறுந்தொகை பாடல்
இப்போது பாடுகிறார் 
-திருமதி நித்யஸ்ரீ வித்யஹரி-
வானூர்தியில் வழியனுப்பி
வீடு திரும்பி
வாசல் திறந்த
எனை வரவேற்று
கண்ணீர் வரவைக்கிறது
வீட்டில் சூழ்ந்திருந்த
சூனியம்!!
என்னுயிர் தொக்கி நின்ற
சூடான உன் உதட்டு
ஈரமுத்தங்கள்
இனியெல்லாம்
Skype லும்
ICQ விலும் மட்டுமே!!
எனைச்சுற்றி உறவுகள்
ஆயிரமிருந்தாலும்
உன் அருகாமையற்ற
இத்தருண தனிமை
வெற்றிட சூனியமாய்
எனை பயமுறுத்துகிறது!!
கடந்த ஒரு திங்கள்
உன்னுடன் சேகரித்த
தேன் நினைவுகளே
இனிவருடம் ஒருவருடம்
என் தலையணையாக!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக