வியாழன், 23 ஏப்ரல், 2015

தலைப்பில்லா கவிதை

தலைப்பில்லா கவிதை
தலைப்பில்லை
கவிதைக்கும் எங்கள் வாழ்க்கைக்கும் 

சொத்துபத்து ஏதுமில்ல 
சொகுசா நாங்க வாழவில்ல 
போனது போக படகு மிச்சம் 
கால் வயிர நெரப்பத் தான் 
உசுர கடலுக்கு அடகு வெச்சோம் 

சூரிய வெளிச்சத்தில் கண்ணு கூச 
கடல் சுறாக்களுக்கு எங்கள திண்ண ஆச 
எல்லைப் பட எங்கமீது குண்டு வீச 
தத்தளிக்கும் நேரத்திலும் தவறாம கேக்குது 
குடும்பத்தின் கதறல் ஓச 

கடல்ல இறக்குற எங்களுக்கும் 
கரையில இருக்குற உங்களுக்கும் 
வித்தியாசம் ஒன்னும் பெருசில்ல 
வயித்த குறைக்க நீங்களும் 
வயித்த நிறைக்க நாங்களும் 
ஓடுறோம் தானே நெசத்துல 

கறையோரம் ஆடுறீங்க கடலோடு 
கடல் தான் எங்களுக்கு சின்ன சுடுகாடு 

மண்குடிசை எங்கள் மாளிகையாச்சு 
மணற் மேட்டில் மணிக்கணக்கில் பேச்சு 
வறுமை எங்கள் வாரிசாச்சு - அதனால் 
நடுநிசியிலும் பசி பழகி போச்சு 

நல்ல நேரம் வரும் நு 
காத்திருக்கும் எங்க சனம் 
காத்தலுக்கு கெடச்ச பரிசு 
தான் கறையோரம் எங்க பொணம் 

எங்க காத்திருப்புக்கு 
காலம் இன்னும் கனியல 
ஆனாலும் எங்க தல குனியல 
உழச்சு கலைக்குறோம் 
மீன் பிடிச்சு பொழைக்குறோம் 

எங்க கதை கேட்டா 
கல்லுக்குள்ளும் ஈரம் வரும் 
நற்சொல்லுக்கும் பாரம் எழும் 

சதா ரணமான எங்கள் வாழ்வை 
சாதரணமாக பழிப்பது நியாயமா 
அழுது புலம்பி அழிந்து போக 
இப்படியொரு பிறவி வேணுமா 

வறுமை தான் எங்களினச் சின்னமானது 
வறுமையால் எங்களினம் சின்னாபின்னமானது 

இத்தனை இருந்தும் மீண்டும் 
கடலுக்கு செல்ல தோணுது 
இதுல இருந்து மீண்டு வர தோனல 
எங்களின் இந்நிலைக்கு 
காரணம் தான் என்ன..? 
மீன் விற்ற பாவமா 
மீன் விட்ட சாபமா..!
நன்றி .சதீஸ்குமார்
எழுத்து .்காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக