அணையிலலா வெள்ளம்
அடம் பிடித்து பாய
அல்லாடும் மனிதன்
எவனைக் காப்பது எதைக் காப்பது
திக்கு முக்காடும் வேளையில்
விடாது கருப்பு என்று
பொழிந்து தள்ளியது அடை மழை
மழையாக மென் தூற்றலாக
வரும் என்று எதிர் பார்த்தோம்
வானமே உடைந்தது போல்
கொட்டோ கொட்டென்று கொட்டியது மழை
இது நமக்கு வரமா/ சாபமா/ என்று
புரியாமல் தவித்தனர் மக்கள்
ஆனாலும் விடவில்லை மழை
நீயா நானா என்று போட்டி போட்டு
கொட்டித் தீர்த்து விட்டு
அடங்கி ஒடுங்கி ஒளிந்து கொண்டது
அதன் வருகையால் வ்ருந்தியோர் சிலரல்ல
எல்லோரும் ஒவொரு விதத்தில்
வருந்தித் தான் மீண்டுள்ளனர்
நாம் மனம் திருந்தி வாழ இதுவும்
இயற்கையின் சோதனை
இறைவனால் கொடுக்கப் பட்டதே
thanks
http://eluthu.com/kavithai/275290.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக