சனி, 22 அக்டோபர், 2016

அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்களை நாங்க கழிச்சிருக்கோம்'.

ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொரு...வர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.
மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக....
இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார்.

எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....
"ஏம்பா நீ சைலண்டா இருக்க......"
'நம்ம குழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'
"எப்படிப்பா கரெக்டா சொல்ற, உனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"
'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'
பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.
தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.
' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.
கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:
'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல எங்களால புரிஞ்சிக்க முடியாமல் போகலாம்.
அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா
புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.'
*'நம்ம ரெஸ்டாரண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்தை விட நம்ம நட்பை அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம்.
*'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட நம்ப உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.
'நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேலை வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்களோட மனசில இருக்கோம்னு அர்த்தம்'.
பின்னொரு காலத்தில நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,
'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'
ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்களை நாங்க கழிச்சிருக்கோம்'.
*#வாழ்க்கை #குறுகியது, ஆனா #அழகானது.*
*படித்ததில் பிடித்தது...*
See More

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

இருள்தீர எண்ணிச் செயல்.

தொழில் செய்ய விரும்புவோர்களின் முதல்கட்ட பயணம். இவர்கள் தங்களுடைய விருப்பத்தை/ கனவை நனவாக்க அடுத்தகட்டத்தில் கால் பதிக்க வேண்டும்.தொழில் சார்ந்த உண்மைக் கதைகள் பலவற்றை பத்திரிகைகள் மூலமாகப் படிக்க வேண்டும்; அல்லது வெற்றியடைந்த தொழிலதிபர்களின் சுயசரிதத்தைக்கூடப் படிக்கலாம். அடுத்த கட்டமாக தங்கள் சொந்தபந்தத்தில் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் தொழில் செய்பவர்களைப் பார்த்து நேரடியாக உரையாட வேண்டும்.
ஏற்கெனவே தொழில் செய்து கொண்டிருக்கும் குடும்பங்களில் இருந்து வருபவர்கள், அவர்கள் குடும்பம் செய்து கொண்டிருக்கும் தொழில்களையோ அல்லது அதை சார்ந்த தொழில்களையோ செய்வார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அத்தொழிலைப் பற்றிய பரிச்சயம் அதிகமாக இருக்கும்.
இன்னும் சிலர் தாங்கள் பல ஆண்டுகள் வேலை பார்த்து விட்டு, அத்தொழிலைப் பற்றிய நுணுக்கங்களை அறிந்து கொண்டு, அதே துறையிலேயே தொழில் துவங்குவர். பல பெரிய தொழில்களை ஆரம்பித்தவர்கள் இந்த வகையில் உள்ளனர். இன்னும் சிலரோ தனக்கு தெரிந்தவர்கள் அனைவரும் ஒரே துறையிலேயே தொழில் செய்கிறார்கள், ஆகவே அதிலிருந்து தான் சிறிது மாறுபட்டு செய்ய வேண்டும் என்று எண்ணி குடும்ப தொழில்களில் இருந்து சற்று விலகி ஆரம்பிப்பர்.

ஞாயிறு, 26 ஜூன், 2016

நாளைய சமுதாயச் சிற்பிகள்

எங்கே போய்க்கொண்டிருக்கிறது நம் தமிழ்ச் சமுதாயம்? தமிழ்நாட்டில்தான் இந்த நிலைமை என்றில்லை. நாடு முழுவதுமே இதுதான் நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கும் போது, நெஞ்சம் பதறுகிறது.

ஆக்கபூர்வமான விஷயங்களில் மக்கள் ஏன் கவனத்தைச் செலுத்துவதில்லை? கடமையைச் செய்வதில்தான் எத்தனை சோம்பேறித்தனம்? கடமையை மீறுவதற்காக லஞ்சம் வாங்கிய காலம் போய், கடமையைச் செய்வதற்கே லஞ்சம் வாங்கி, அப்படி வாங்குவதுதான் சரி; வாங்காதவன் முட்டாள் என்று ஆகிவிட்டது. பிறந்ததிலிருந்தே இதைப் பார்த்து வளரும் இன்றைய தலைமுறை, இதுதான் சரியென்று எண்ணிப் பின்பற்றாது என்பது என்ன நிச்சயம்? கடமையே இந்த நிலைமையிலிருக்கும் போது, கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் எங்கே தேடுவது?

இதற்கெல்லாம் காரணங்கள் என்ன? தன் வீடு, தன் பெண்டு, தன் பிள்ளை என்ற சுயநல நோக்கம் வளர்ந்ததற்குக் காரணம் என்ன? சமுதாயமா? பெற்றோரா? ஆசிரியர்களா? கல்விமுறையா? சினிமாவா? டிவியா? அரசியலா? இவை அனைத்தும்தான் என்றால், இவற்றைத் தண்டிப்பது யார்? இப்படிக் கேள்விகள் ஆயிரம். பதில்தான் யாருக்கும் தெரியவில்லை.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். மதிப்பீட்டுமுறை (Value System) எனப்படும் வாழ்க்கை நெறிகளின் வரிசைக்கிரமத்தில் ஏற்பட்ட கோளாறுதான் இவற்றிற்கெல்லாம் காரணம். இந்த value system கெட்டுப்போன(வ)தற்குத்தான் மேற்சொன்ன காரணிகள் துணை நிற்கின்றன.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! தங்கள் விருப்பு வெறுப்புக்களைத் தங்கள் குழந்தைகள் மீது திணிப்பது மற்றும் தாம் சரியென நினைக்கும் விஷயங்களைக்கூட நாலு பேர் நம்மைப் பார்த்து என்ன சொல்வார்கள் என்று துன்பகாலங்களில்கூடப் பங்கெடுத்துக் கொள்ள முன்வராத அந்த முகம் தெரியாத யாரோ நான்கு பேருக்காக ஏற்க மறுத்து மான ரோஷத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறோம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு வாழும் முதுகெலும்பற்ற பெற்றோர்! 

இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயச் சிற்பிகள் என்பதை மறந்து, வாரத்திற்கு இரண்டு மணிநேரமாவது நீதிபோதனை வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற பரிந்துரையைக் காற்றில் பறக்கவிட்டு, தன்னிடம் டியூஷன் படிக்க வருபவர்களுக்கே வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் என மாணவர்களைச் சீரழித்து, வகுப்பறையில் அமர்ந்து கந்துவட்டிக் கணக்குப் பார்க்கும் பொறுப்பில்லாத்தனத்தின் மொத்த உருவமாய்த் திகழும் ஆசிரியர்கள்!

மதிப்பெண் என்ற ஒரு தவறான அளவுகோலை மட்டுமே கொண்டு மாணவர்களின் திறமையை எடைபோட்டு, கல்விக்கூடங்களை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களாக மாற்றிய நமது கல்விமுறை!

ஈறைப் பேணென்றும் பேணைப் பெருமாளென்றும் சொல்லி விட்டு, நாட்டில் நடக்காததையா நாங்கள் படமாக எடுக்கிறோம் எனத் தவறையே நியாயப்படுத்தும் தரங்கெட்ட சினிமாக்கள்!

சினிமாவாவது நீங்கள் திரையரங்குக்குச் சென்றால்தான் உங்களைக் கெடுக்கும். ஆனால் நாங்கள் உங்கள் வரவேற்பறைக்கே வந்து உங்களுக்குச் சிரமமின்றி உங்கள் சிந்தனையை மழுங்கடிக்கிறோம் எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட மீடியாக்கள்!

திருடர்களுக்கும் ரவுடிகளுக்கும் அங்கீகாரம் கொடுத்து, அவர்கள் குறைகளைச் சாதனைகள் போல எடுத்துக் கூறி மக்களை மதிமயக்கி, பணபலம் மற்றும் ஆள்பலத்தின் மூலம் அரசு இயந்திரத்தையும் அதிகாரிகளையும் தங்கள் விருப்பம் போல் ஆட்டி வைக்கும் அரசியல்வாதிகள்!

சமுதாயம் என்று தனியாக ஒன்று இருக்கிறதா என்ன? மேற்சொன்ன அனைத்தும் சேர்ந்ததுதானே அது? பிறகெப்படி இந்தப் பலமுனைத் தாக்குதலில் சிக்குண்டு தவிக்கும் குழந்தையினால் மன ஆரோக்கியத்துடன் வளர முடியும்? தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாம் சரிதான் என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றதே இந்தச் சமுதாயம்! அதை அந்தக் குழந்தை எதிர்த்துப் போராட வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதுதான் எப்படி நியாயமாகும்?

ஆனாலும், இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்திலிருந்துதானே சிப்பிக்குள் முத்தென இராமானுஜரும் பாரதியும் பெரியாரும் காமராஜரும் அப்துல்கலாமும் வந்தார்கள்? ஆகவே, இந்தப் பலமுனைத் தாக்குதல்களைச் சமாளிக்க நம்மிடம் ஆயுதம் ஒன்று இருக்கிறது என்பது புலனாகின்றதன்றோ? அது என்ன?
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் 
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் 
இன்னாது என்றாலுமே இலமே; 'மின்னொடு 
வானம் தண்துளி தலைஇ, ஆறாது 
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று 
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே;
(புறநானூறு - பாடல்:192)

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தப் பாடல் நமக்கு உணர்த்தும் வாழ்வியல் கூறு என்ன? பாடலின் பொருள் ஒருபுறம் இருக்கட்டும். அதில் சொல்லப்பட்டிருக்கும் அன்று வாழ்ந்த தமிழ்க்குடிக்கு இருந்த சிந்தனை முதிர்ச்சியைப் பாருங்கள். இதுபோன்றவற்றைப் படித்தால்தானே அதைப் புரிந்துகொள்ள முடியும்? இதைப்பற்றி ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது, 'அதெல்லாம் அந்தக் காலத்தில் அரசர்களைப் புகழ்ந்து பரிசில் பெறுவதற்காகப் புனைந்துரைக்கப்பட்ட கற்பனைகள்' என்றார். அப்படியானால், சங்க இலக்கியம் முழுவதுமே பாராட்டுப் பத்திரங்களாகத்தானே இருந்திருக்க வேண்டும்? அகத்திணைப் பாடல்கள் இயற்றப்பட்டதன் நோக்கம் என்ன? அப்படியல்ல. அன்றைய வாழ்க்கை முறைகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடிதான் சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியம் மட்டுமல்ல. சங்கம் மருவிய காலத்தில் வந்த இலக்கியங்களும், இடைக்கால மற்றும் இக்கால இலக்கியங்களும் இதைத்தான் உணர்த்துகின்றன.

இந்தப் பதிவுகள்தானே நாம் யார் என்று நம்மை நமக்கு அடையாளம் காட்டி, சரியான ஒரு Value System -ஐ உருவாக்கிக் கொள்ள உதவும் சாதனங்கள்? ஆகவே, படிக்கும் பழக்கம்தான் மேற்சொன்ன பலமுனைத் தாக்குதலுக்கு எதிராக, சிந்தனை முதிர்ச்சி என்ற கேடயந்தாங்கி, புரட்சிகரக் கருத்துக்கள் என்ற வாள்சுழற்ற உதவுவது.

மெகா சீரியலோ அல்லது கிரிக்கெட் மேட்சோ பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை. படிப்பதற்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். மாணவப்பருவத்திலிருந்தே இந்தப் படிக்கும் பழக்கம் ஆரம்பித்துவிட வேண்டும். அப்போதுதான் பெற்றோர் சொல்லித் தராவிட்டாலும் நம்மைச் சுற்றி நடக்கும் நல்லது கெட்டது தெரிந்து கொள்ள முடியும். கதைப்புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்துவிட்டு, தேர்வில் தவறிவிட்டால் என்ன ஆவது என்ற தேவையற்ற பயம் வேண்டாம். தேர்வில் தோல்வியடைவதற்கு படிக்கும் பழக்கம் எந்தவிதத்திலும் காரணமாகாது. மாறாக, விடைகளை இன்னும் விரிவாக, நிறைய மேற்கோள்கள் காட்டி எழுத உதவும். வெறும் பாடப்புத்தகத்தை மட்டும் மனனம் செய்து, தேர்வில் நூற்றுக்கு நூறு வாங்குவதில் ஒரு பயனுமில்லை.

'என் பையன் ஆங்கில மீடியத்தில் படிக்கிறான். தமிழே படிக்க வரமாட்டேனென்கிறது'. இது நிறைய நடுத்தரக் குடும்பங்களின் கவலையாக இருக்கிறது. ஆங்கில வழிக்கல்வி பயில வேண்டியிருப்பது காலத்தின் கட்டாயம் எனப் பெற்றோர்கள் நினைக்கின்றனர். இந்தப் பள்ளிகளில் தமிழ் கற்றுத்தரப்படுவதேயில்லை. வகுப்பறைகளில் தமிழில் பேசினால் அபராதம் கட்டச் சொல்லும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கல்லூரிகள் தமிழ்நாட்டில் நிறைய இருக்கின்றன. நான் படித்த கல்லூரியிலும் அப்படித்தான் இருந்தது. சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்; வைத்ததொரு கல்வி மனப்பழக்கம். முதலில் படிக்கும் பழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்துங்கள். பிறகு பாருங்கள். ஆங்கில மீடியமாக இருந்தாலென்ன? ஹிந்தி மீடியமாக இருந்தாலென்ன? நல்ல தமிழ் நாவில் புரளும்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் மற்றும் இலக்கிய மேடைகளில் பேசிவரும் கலைஞரால், ஒவ்வொரு மேடையிலும் ஏதாவது ஒரு புதுக்கருத்தை மேற்கோள் காட்டிப் பேச முடிவது, தினமும் படிப்பதற்கென இரண்டு மணி நேரங்களை ஒதுக்குவதால்தான். இல்லாவிட்டால், பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்தவரால் சங்கத்தமிழ் மற்றும் குறளோவியத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டு, தொல்காப்பியப் பூங்காவில் உலா வர முடியுமா?

எடுத்த உடனேயே எட்டுத்தொகையையும் பத்துப்பாட்டையும் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆரம்பத்தில் குமுதமோ விகடனோ மாத நாவலோ கூடப் படிக்கலாம். ஆனால் தினமும் படிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். இப்படித் தினமும் படிக்கும்போது, காலப்போக்கில் அல்லவை விடுத்து, நல்லவற்றை மனம் தானே நாட ஆரம்பித்து விடும்.

எனக்குப் போரடித்தால் சிட்னி ஷெல்டன் அல்லது ராபின்குக் தான் படிப்பேன் என்று சில ஜந்துக்கள் பிதற்றுவதைக் காணலாம். கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்று வள்ளுவர் சொன்னது இவர்களுக்காகத்தான். ஆங்கில நாவல்களைப் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஷெல்லியையும் கீட்ஸையும் சிலாகிக்கும் அதே வேளையில், பாரதியையும் கம்பரையும் சிறிதேனும் கண்டுகொள்ளுங்கள்.

மேலோட்டமாகப் பார்ப்பதற்கு 'பொன்னியின் செல்வன்' ஒரு சாதாரண சரித்திர நாவல் போலத் தோன்றினாலும், அதைப் படித்தவர்களுக்குள் அது ஏற்படுத்திய மாற்றம் வார்த்தைகளில் வடிக்க இயலாதது. பலபேருடைய வாழ்க்கையை நல்வழியில் திசைமாற்றிய பெருமை அதற்கு உண்டு. இந்த www.varalaaru.com ஆசிரியர் குழுவிலுள்ள நாங்கள் அனைவரும் பொன்னியின் செல்வனைப் படித்தே இருக்காவிட்டால், இந்த இணையத்தளத்தை இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இப்போது, மக்களிடையே படிக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது என்று நாளிதழ்கள் தெரிவிக்கின்றன. இதற்குச் சான்றாக, சென்ற ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியைக் கூறுகின்றன. ஆனால், அதிர்ச்சி தரும் செய்தி என்னவெனில், பல கோடிகளுக்குப் புத்தகங்கள் விற்பனையான போதிலும், அதிக அளவில் விற்றவை சமையல், ஜோதிடம், ஆன்மீகம், வாஸ்து, செல்வந்தராவது எப்படி? போன்ற புத்தகங்கள்தான்.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று ஏங்கும் மக்களின் நிலையை மாற்றி, தெளிவும் தெரியாமல் முடிவும் புரியாமல் மயங்கும் எதிர்காலத்தை வளமாக்க இந்தப் படிக்கும் பழக்கம் உதவும் என்பதில் சந்தேகமில்லை!!

நாளைய சமுதாயச் சிற்பிகள்

https://www.youtube.com/watch?v=iNFMesKUgWY&feature=youtu.be

https://youtu.be/iNFMesKUgWY

நன்றி :varalaaru.com

போதிக்கும்போதும் புரியாதது…. !! பாதிக்கும் போது புரியும் ….!!

  • எழுதியவர் : செல்வமணி
  • நாள் : 26-Jun-16, 11:58 pm
  • சேர்த்தது : AUDITOR SELVAMANI
  • பார்வை : 1http://eluthu.com/kavithai/296911.html

தலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர் இருந்தார். அடர்த்தியான புருவம் , பெரிய மீசை , அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்க்குச்சி போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது அடையாளம் . 
வீதியில் அவரைக் கண்டுவிட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால் மட்டந்தட்டிவிடுவார். இதில் சிலர் அழுதுவிடுவது கூட உண்டு. 

ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை. ஊர் எல்லை வரை வந்து விட்டார். அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்து விட்டார். 

அவரது உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து , நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது. இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது. இன்று இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆகவேண்டுமென்று முடிவெடுத்து அவரது கடையை நெருங்கினார். 

” என்னப்பா ! முடி வெட்ட எவ்வளவு ? சவரம் பண்ண எவ்வளவு ?” என்றார். அவரும் “முடிவெட்ட நாலணா , சவரம் பண்ண ஒரணா 
சாமி ! ” என்று பணிவுடன் கூறினார். பண்டிதர் சிரித்தபடியே , 
“அப்படின்னா என் தலையை சவரம் பண்ணு ” என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் . 

வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை . வேலையை ஆரம்பித்தார் . 

பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான். நாவிதர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருந்தார். அவர் அமைதியாக இருக்கவே அடுத்த கணையைத் தொடுத்தார் . 

” ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது . உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க ? ” இந்தக் கேள்வி அவரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை. 

“நல்ல சந்தேகங்க சாமி . நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனாலதான் நாங்க நாவிதர்கள். எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா? ” 

இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது. அடுத்த முயற்சியைத் துவங்கினார் . 

” இதென்னப்பா , கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு . கோல் எங்கே போச்சு ?” 

இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது. 
“சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க ” என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் . 

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம் . கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார் . 
” எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற . ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு ” . 

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது . அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம் . 
இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார். கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார். 

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார். பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார் , 
“சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?” 
பண்டிதர் உடனே ஆமாம் என்றார். 

கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்தார். 
“மீசை வேணுமுன்னிங்களே சாமி. இந்தாங்க ” . பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய். அதிர்ச்சியில் உறைந்து போனார். 

நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார் . அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார், 
“சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா ?” 
இப்போது பண்டிதர் சுதாரித்தார். 
“வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான் ” . உடனே சொன்னார். 
“இந்தப் புருவம் எனக்கு வேண்டாம் . வேண்டவே வேண்டாம்”. 
நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார் . 

“சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது “. என்றபடி கண்ணாடி அவர் முகத்துக்கு முன்பாகக் காட்டினார். 
நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல் , முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல் , அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது. 
கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு நடையைக் கட்டினார். 

�நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல. 
�இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும். 
போதிக்கும்போதும் புரியாதது…. !! பாதிக்கும் போது புரியும் ….!! 
“துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான், அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள் “

சனி, 25 ஜூன், 2016

அருளப்பட்ட இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது

லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். அந்த ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புத் தகுதி பெற்றுள்ளதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
"நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (திருக்குர்ஆன் 97 : 1-5)"
திருக்குர்ஆன் அருளப்பட்ட இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்று இங்கே அல்லாஹ் கூறுகிறான். மேலே நாம் குறிப்பிட்ட வசனத்தில் ரமளான் மாதத்தில்தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது எனவும் இறைவன் கூறுகிறான். அந்த ஓர் இரவு நிச்சயம் ரமளான் மாதத்தில் தான் அமைந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
அந்த இரவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் வரும் ஒற்றையான இரவுகளில் (21,23,25,27 மற்றும் 29வது இரவுகளில் )அமைந்திருக்கும் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும், சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறுகினறான். அந்த இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள் ஆகியவற்றைக் கொண்டு பூமியில் இறங்குகின்றார்கள். அந்தச் சிறப்பு வைகறை உதயமாகும் வரையிலும் இருக்கும் என்று அருள்மறையாம் திருமறை குர்ஆன் சான்று பகர்கின்றது.
லைலத்துர் கத்ர் என்பது 27 வது இரவு மட்டுமே என்கின்ற தவறான கருத்து இந்தியத் துணைக்கண்டத்திலும் இன்னும் சில நாடுகளிலும் பரவலாக நிலவுகிறது. இந்த கருத்து தவறு என்பதை உணர்ந்து கொள்ள, இதனைப் பற்றிய ஹதீஸ்:
எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்