வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

இருள்தீர எண்ணிச் செயல்.

தொழில் செய்ய விரும்புவோர்களின் முதல்கட்ட பயணம். இவர்கள் தங்களுடைய விருப்பத்தை/ கனவை நனவாக்க அடுத்தகட்டத்தில் கால் பதிக்க வேண்டும்.தொழில் சார்ந்த உண்மைக் கதைகள் பலவற்றை பத்திரிகைகள் மூலமாகப் படிக்க வேண்டும்; அல்லது வெற்றியடைந்த தொழிலதிபர்களின் சுயசரிதத்தைக்கூடப் படிக்கலாம். அடுத்த கட்டமாக தங்கள் சொந்தபந்தத்தில் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் தொழில் செய்பவர்களைப் பார்த்து நேரடியாக உரையாட வேண்டும்.
ஏற்கெனவே தொழில் செய்து கொண்டிருக்கும் குடும்பங்களில் இருந்து வருபவர்கள், அவர்கள் குடும்பம் செய்து கொண்டிருக்கும் தொழில்களையோ அல்லது அதை சார்ந்த தொழில்களையோ செய்வார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அத்தொழிலைப் பற்றிய பரிச்சயம் அதிகமாக இருக்கும்.
இன்னும் சிலர் தாங்கள் பல ஆண்டுகள் வேலை பார்த்து விட்டு, அத்தொழிலைப் பற்றிய நுணுக்கங்களை அறிந்து கொண்டு, அதே துறையிலேயே தொழில் துவங்குவர். பல பெரிய தொழில்களை ஆரம்பித்தவர்கள் இந்த வகையில் உள்ளனர். இன்னும் சிலரோ தனக்கு தெரிந்தவர்கள் அனைவரும் ஒரே துறையிலேயே தொழில் செய்கிறார்கள், ஆகவே அதிலிருந்து தான் சிறிது மாறுபட்டு செய்ய வேண்டும் என்று எண்ணி குடும்ப தொழில்களில் இருந்து சற்று விலகி ஆரம்பிப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக