திங்கள், 17 செப்டம்பர், 2012

பூமிக்கொரு கனவு இருக்கு


திருட்டுப் பயலே திருட்டுப் பயலே சேதி கேளடா..........



இந்தப் பாட்டை படிப்பதற்கு பொருமை இல்லாதவர் பாடலைக் கேட்கவும் என அறிவுறுத்தப் படுகின்றனர்.. 

திருட்டுப் பயலே திருட்டுப் பயலே 
சேதி கேளடா...........

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையில் 
திருடன் தானடா உள்ளே திருடன் தானடா

எங்கே மனிதன் போய் சொன்னானோ 
அது தான் முதல் திருட்டு

ஆசை எல்லை மீறும் போது 
அணைகளை உடைக்கிது திருட்டு

மண்ணும் பொன்னும் பெண்ணும் தானே 
மனிதர்களின் திருட்டு 

இது அன்று தொடங்கி இன்று வரைக்கும் 
விடியாத இருட்டு 

கண்களாலே பெண்மை ஒருவன் திருட நினைக்கிறான் 
கண்ணால் திருட நினைக்கிறான் 

கவிதையிலே புகழ்பவன் தமிழில் திருட நினைக்கிறான் 
தமிழால் திருட நினைக்கிறான் 

கால்களிலே விழுபவன் பணிவில் திருட நினைக்கிறான் 
பணிவால் திருட நினைக்கிறான் 

கையில் சில்லறை உள்ளவன் காசில் திருடி முடிக்கிறான் 
காசால் திருடி முடிக்கிறான் 

பூமிக்கொரு கனவு இருக்கு
புரியாமல் காலம் கெடக்கு

உலகத்தில் நாலே பேரு
தொலஞ்சிப் போகணும்

அந்த நாலு பேரும் இல்லா உலகம்
சொர்கம் ஆகணும்

ஊரை ஏய்க்கும் ஒருத் திருடன்
உடலை விற்கும் விபச்சாரி
உயிரைக் கொல்லும் கொலை காரன்
உணவு தேடும் பிச்சைக் காரன்

நான்கு பேரும் இல்லா நாடு
கனவு தானப்பா 
அந்த நான்கு தலைகளை 
ஒழிக்கும் தலைவன் கடவுள் தானப்பா!!
உலகின் கடவுள் தானப்பா!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக