சனி, 12 ஏப்ரல், 2014

இந்தியப் பெருங்கடல் முஸ்லிம்கள்….!

--------CMN SALEEM-----------

.......மக்கள் தொகையில் சிறுபான்மை என்ற நிலையை 
முஸ்லிம் சமூகம் புவியியல் ரீதியாக மாற்றி அமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்……

.........கேரள - தமிழக- இலங்கை பகுதி முஸ்லிம்களுக்கிடையே மீண்டும் திருமண உறவுகள் அதிகம் நடை பெற வேண்டும்....

உலக வரலாற்றில் நெருக்கடிகளைச் சந்திக்காத எந்தச் சமூகமும் சாதித்ததாகச் சான்றுகள் கிடையாது.நெருக்கடிதான் ஒரு மனிதனை ஒரு சமூகத்தை வரலாற்றுச் சாதனையாளர்களாக மாற்றுகிறது.

இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளில் இந்தியா மற்றும் இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகம் கடந்த 100 ஆண்டுகளாக சமூக ரீதியாக பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

குறிப்பாக இந்த 60 ஆண்டு காலமாக முஸ்லிம்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் தங்களின் உயிரினும் மேலான கலாச்சாரத் தனித்தன்மை ஆகியவற்றிற்கு மிகப்பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஜனநாயகம் என்ற போர்வையில் ஆட்சி அதிகாரத்தின் உள்ளே நுழைந்த சில அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும் மார்க்கத்தை விட தேசியத்தை உயர்வானதாக கருத வேண்டும் என்று இஸ்லாமிய மூல விதிகளில் ஒன்றான சர்வதேசியத்தை மறுத்து சிறுபான்மை மக்களின் கலாச்சாரத் தனித்தன்மையை பாதுகாப்பதற்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மறுத்து பெரும்பான்மைக் கலாச்சாரத்தில் அவர்களை நீர்த்துப் போகச் செய்யும் வேலைகளை இரண்டு நாடுகளிலும் திட்டமிடுதலோடு செய்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் இத்தகைய ஆபத்துகள் அதிகரிக்க இருக்கின்றன. இந்த ஆபத்துகளை அறிவு ரீதியாக எதிர் கொள்ளும் வகையில் இஸ்லாமியச் சமூகக் கட்டமைப்புக் கொள்கையின்படி ஒரு தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில், கலாச்சார ரீதியாக பல நூற்றாண்டுகள் தொடர்புடைய இலங்கை - இந்திய முஸ்லிம்கள் ஒரே சமூகமாக ஒருங்கிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அது இஸ்லாமியச் சட்டமும் ஆகும்.

மொழி, கலாச்சாரம் மற்றும் இன ரீதியாக ஏறக்குறைய ஒரே மரபு வழித் தொடர்புடைய சமூகமாக கருதப்படும் தமிழக-கேரள - இலங்கை முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலான இஸ்லாம் எனும் உலகச் சகோதரத்துவ கயிற்றைப் பிடித்து ஒருங்கிணைய வேண்டும், அது முஸ்லிம் உம்மத் என்று உருப்பெற வேண்டும்.

எண்ணிக்கையில் குறைவான, உள்ளத்தால் பலவீனமான சமூகம் என்ற நிலையிலிருந்து இந்திய - இலங்கை முஸ்லிம்கள் எண்ணிக்கையில் வலிமையான, உள்ளத்தால் உறுதியான சமூகம் என்ற நிலைக்கு உயர வேண்டும்.

இந்தியாவின் மாபெரும் அறிவு ஜீவியாக முஜத்திதாக 18-ம் நூற்றாண்டில் இந்தியத் துணைக் கண்ட முஸ்லிம் உம்மத்திற்கு தலைமை ஏற்ற மௌலானா ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் ‘முஸ்லிம்களின் சமூக வாழ்வு’ குறித்த கருத்தாக்கத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

“முஸ்லிம்கள் தங்கள் வாழ்வை ஒரே தலைமையின் கீழ் அமைத்துக் கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த தலைமை இல்லாத போது பிராந்திய ரீதியாக முஸ்லிம்கள் ஒருங்கி
ணைந்து ஒரு தலைமையைத் தேர்வு செய்து வாழ வேண்டும். பிராந்திய ஒருங்கிணைப்புக்கு வழி இல்லாத போது குடும்பத்தின் மூத்தவரை தலைவராகக் கொண்டு அவருக்குக் கட்டுப்பட்டு வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.”

- ஹுஜ்ஜா - ஷா வலியுல்லாஹ் (ரஹ்).

இந்தக் கருத்தின் அடைப்படையில் முதலில் இன்றைய கேரள - தமிழக - இலங்கை முஸ்லிம்கள் ஒருங்கிணைய வேண்டும். எப்படி ஒருங்கிணைவது ? என்ன விளைவுகள் ஏற்படும்? இவற்றை ஆழமாக வரலாற்று நிழலில் நின்று அலசிடக் கடமைப்பட்டுள்ளோம்.

பல இன, மத, சாதியக் குழுக்கள் வாழும் இந்தியா - இலங்கை போன்ற நாடுகளில் ஒரு இனக்குழுவின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கும் பிற குழுக்களின் அடக்குமுறைகளிலிருந்து அது பாதுகாப்புப் பெறுவதற்கும் அந்த மக்களின் எண்ணிக்கை மிக முக்கியப் பங்காற்றுகிறது.

எண்ணிக்கையில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் எல்லாவற்றையும் நேர்மறை (Positive) யாக சிந்திப்பார்கள், நேர்வினையாற்றுவார்கள் (Positive Approach ). பிறரை விட நாம் குறைவான எண்ணிக்கை கொண்டவர்கள் என்ற நிலை வருகின்ற போதும், நாம் பாதுகாப்பு பெற முடியாது என்ற சூழல் உருவாகின்ற போதும் அச்சத்தில் அந்த சமூகம் எதிர் வினையாற்றும் (Negative Approach). இது மனிதர்களுக்கே உரிய உளவியல் காரணி.

மக்கள் தொகையில் சிறுபான்மை என்ற நிலையை முஸ்லிம் சமூகம் புவியியல் ரீதியாக மாற்றி அமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் எங்கெல்லாம் சிறுபான்மையாக வாழ்கிறார்களோ அவர்களை ஒருங்கிணைத்து ஒரு ஜமாஅத்தாக மாற்றும் முயற்சி வேண்டும்.

தமிழகத்தின் உட்புறத்தில் சிறுகுடும்பங்களாக கிராமப்புறங்களில் பிற சமூகத்தோடு கலந்து வாழ்வதில் கலாச்சாரத் தனித்தன்மைக்கு ஆபத்து ஏற்படும். அந்த மக்களை முஸ்லிம் முஹல்லாக்களில் குடியமர்த்த வேண்டும். இதற்கு பெரும் முஹல்லாக்களில் வாழும் முஸ்லிம்களின் உள்ளத்தில் மாற்றம் உருவாக வேண்டும். பொதுவாக புதிதாக யாராவது குடும்பம் சகிதம் முஸ்லிம் ஊர்களில் குடியேறினால் அந்தக் குடும்பத்தை பஞ்சம் பிழைக்க வந்தவர், வந்தான் வரத்தான் என்று அழைக்கும் காட்டுமிராண்டித்தனம் இன்றைய முஸ்லிம்களிடம் நிலவுகிறது.

இது போன்ற இஸ்லாமிய அடிப்படைக் கருத்திற்கு முரணான வழக்கம் அடியோடு களையப்பட வேண்டும்.

பெருமானார் (ஸல்) மக்காவை விட்டு புலம் பெயர்ந்து மதீனா வந்தவுடன் மக்கா - மதீனா இரண்டு வேறுபட்ட குணம் மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டிருந்த முஸ்லிம்களை இஸ்லாம் என்ற மைய்யப்புள்ளியில் பின்னிப் பிணையச் செய்தார்கள். அவற்றில் திருமணம் மற்றும் பொருளாதாரக் கலப்புகளே முன்னிலை வகித்தன.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அரபு வணிகர்கள் இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்த போது கேரள - தமிழக - இலங்கைப் பகுதிகளில் உள்ள பெண்களை திருமணம் செய்ததில் ஏற்பட்ட இனக்கலப்பும், இஸ்லாமிய விதைப்பும் கரையோரப் பட்டினங்களில் இஸ்லாத்தை வேரூன்றச் செய்தது முஸ்லிம்களாகப் பெருகச் செய்தது.

16 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு கொள்ளையடிக்க வந்த போர்த்துக்கீஸியரால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஆபத்து ஏற்பட்ட போது அவர்களை எதிர்த்து கோவாவிலிருந்து இலங்கை வரையிலுமான அரபு - இந்தியப் பெருங்கடலில் வீரப்போர் புரிந்த குஞ்ஞாலி மரைக்காயரின் படையில் தென்னிந்தியக் கரையோரங்களில் வாழ்ந்த கேரள - தமிழக மற்றும் இலங்கை முஸ்லிம்கள் இரண்டரக் கலந்து நின்று போரிட்டனர்.

1950 இல் இந்திய - இலங்கைப் பகுதிகள் பிரிட்டீஸாரிடமிருந்து விடுதலை அடைகின்ற வரை யிலும் தென்னிந்தியாவின் காசர் கோடு, கொச்சி, கள்ளிக் கோட்டை (கோழிகோடு) தேங்காய்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை, தொண்டி, அதிராம்பட்டினம், தோப்புத்துறை,நாகை, நாகூர், காரைக்கால், பரங்கிப்பேட்டை, கடலூர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்ளுக்கும், இலங்கையின் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, பேருவளை, கொழும்பு, காலி, மற்றும் இலங்கையின் உட்புறத்திலும் வாழ்ந்த முஸ்லிம்
களுக்குமிடையே திருமண, வர்த்தக, கல்வி, கலாச்சாரப் பிணைப்புகள் பெருகி இருந்தன.

இஸ்லாம் அறிமுகமான காலம் முதல் நீடித்த அந்த உறவுப் பாலங்கள் போர்ச்சுக்கீஸ் மற்றும் பிரிட்டீஸ் காலத்திலும் அதற்குப் பிறகான இந்திய - இலங்கை குடியரசுக் காலத்திலும் மிகவும் பலவீனமடைந்துள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் பெரும்பாலும் தென்னிந்திய கரையோரப்பட்டினங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்களே, அந்த இரத்த உறவுகளை பொருளாதாரப் பலன்களுக்காக புதுப்பிக்கத் தவறியதால் இருபகுதியிலும் உறவு அறுந்த சமூகமாக மாறி விட்டது. அந்த உறவுகள் புதுப்பிக்கப்பட வேண்டும்.

தமிழக கடற்கரையோரப் பட்டினங்களில் வாழும் முஸ்லிம்களின் உணவு, உடை, பேச்சு வழக்கு, திருமண முறைகள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றில் இலங்கை - தமிழக முஸ்லிம்களிடையே உள்ள ஒற்றுமையே இவை இரண்டும் ஒரே சமூகம் என்ற சான்றைத் தருகிறது.

இந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்ட இடைவெளியை நீக்கி முன்பைக் காட்டிலும் மிக வலிமையாக இந்த இரண்டு பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் ஒரு உடலைப் போல் ஒருங்கிணைய வேண்டும். ஜனநாயகத்திலும், சமூக அமைப்பிலும் மக்கள் எண்ணிக்கைதான் முடிவுகளை மாற்றுகின்றன. சிறிய சிறிய குழுவாக சிறுபான்மைச் சமூகமாக வாழ்வதற்கு இஸ்லாம் ஆதரவு தெரிவிக்கவில்லை. அது அழிவை உண்டாக்கும்.

இன்றைய நிலையில் கேரள - தமிழக- இலங்கை ஆகிய பகுதி முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 3 கோடியைத் தொட்டு விடும். இது ஒரு வலிமையான சமூக, அரசியல் தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய எண்ணிக்கையாகும். பல ஐரோப்பிய நடுகளின் மக்கள் தொகையைக் காட்டிலும் கூடுதலானது.

இந்தப் பகுதி முஸ்லிம்களுக்கிடையே மீண்டும் திருமண உறவுகள் அதிகம் நடை பெற வேண்டும். இங்கே நான் திருமண உறவுகளை திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டுவது மிக நுணுக்கமாக அணுகப்பட வேண்டிய அகக் கருத்தாகும்.

தமிழீழப் போரில் இலங்கைத் தமிழர்கள் மீது சிங்கள இராணுவம் ஈவு இரக்கமற்ற முறையில் நடந்து கொண்ட போது தமிழகத்தில் பெரிய அளவில் கொந்தளிப்பு ஏற்படாமல் போனதற்குக் காரணம் இலங்கை தமிழ் சமூகத்திற்கும் தமிழக மக்களுக்குமிடையே திருமண உறவு முறைகள் இல்லாமல் போனது மிக கவனிக்கத்தக்கக் காரணம்.

இன உணர்வு இருந்ததே தவிர இரத்த உறவு இருக்கவில்லை.இல்லாமல் போனதற்குக் காரணம் கொடுமையான சாதீயம்.

தமிழகப் பெண்கள் அதிக அளவிற்கு மணமுடிக்கப்பட்டு யாழ்ப்பாணத்திலோ கிளிநொச்சியிலோ முள்ளி வாய்க்காலிலோ வாழும் சூழல் இருந்திருந்தால், இரு பகுதிகளில் வாழும் மக்களிடையே இரத்த உறவுகள் பசுமையாக இருந்திருந்தால் இலங்கையில் நடைபெற்ற ஈழப்போரின் வடிவமும் முடிவும் வேறுவிதமாக இருந்திருக்கும்.

தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டு தானாக பலர் கடல் தாண்டிச் சென்றிருப்பர்.

முன்பு சிறிய நாட்டுப் படகுகளில் இலங்கை தமிழக கடல் போக்குவரத்து நடைபெற்றது.வெறும் 80 - 100 கிலோ மீட்டர் தூரம்தான். பாஸ்போர்ட் இமிகிரேஷன் இந்த அடாவடி எல்லாம் கிடையாது.இன்று நாடுகளுக்கு மத்தியில் எல்லை போடுகிறோம் என்ற பெயரில் கடலுக்கும் எல்லை விதித்து மனித உறவுகளுக்கு மத்தியில் நிலையான பிரிவினையை ஏற்படுத்தியுள்ளனர்.

இன்று இலங்கை - தமிழக போக்குவரத்து - விமானம் மூலம்தான் நடை பெறுகிறது. மிக விரைவில் கப்பல் போக்குவரத்து மீண்டும் துவங்க உள்ளது. தனுஷ்கோடிக்கும் மன்னாருக்கும் இடையே தரைப்பாலம் அமைக்கும் முந்தைய திட்டம் தயாராகி வருகிறது. இப்போதைக்கு பயணக் கட்டணம் கொஞ்சம் கூடுதல்தான் ஆனாலும் சமூகக் கலப்பின் அவசியத்தை கருத்தில் கொண்டால் இதெல்லாம் ஒரு பெரிய இடையூறு இல்லை. இன்றும் உறவுகள் தொடர்ந்து நீடிக்கும் குடும்பங்களில் அவற்றை இன்னும் வலிமைப்படுத்தி விரிவாக்கிட வேண்டும்.

கேரளாவிலும் இலங்கையிலும் மக்கள் விகிதாச்சாரத்தில் பெண்கள் அதிகம். கேரளாவில் 1000 ஆண்களுக்கு 1100 பெண்கள்.இலங்கையில் 1000 ஆண்களுக்கு 1050 பெண்கள் என்பதைத் தமிழக இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.தமிழக - கேரள முஸ்லிம்களிடையே எல்லையோர மாவட்டங்களில் அதிகமான திருமணங்கள் நடைபெறுகின்றன. அதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.அதில் இறையச்சமும் நேர்மையும் நிரம்பியிருக்க வேண்டும்.

வர்த்தகம்

பெருகி வரும் வர்த்தக வாய்ப்புகளை இந்த மூன்று பகுதி மக்களும் முறையாகப் பயன்படுத்திட தேவையான வர்த்தக உறவுகளும், ஒப்பந்தங்களும் கூட்டு முதலீடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும். இந்தியப் பெரும் முதலாளிகள் போருக்குப் பிறகான இலங்கையில் பல பெரிய முதலீடுகளைச் செய்து தொழிற்சாலைகளைத் துவக்கியுள்ளனர். அது பற்றி நாம் யோசிக்கக் கூட இல்லை. இந்த வர்த்தகப் பரிவர்த்தனைகள் அனைத்தும் மிக நேர்மையாக அனுபவமும், சமூகப் பற்றும், இறையச்சமும் நிறைந்தவர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கல்வி

கேரள - தமிழக முஸ்லிம்களுக்குக் கிடைக்கின்ற விரிவான உயர்கல்வி வாய்ப்புகள் இலங்கை முஸ்லிம்களுக்கு குறைவாக உள்ளன. அதனால் இலங்கை முஸ்லிம் மாணவர்களுக்கு உயர்கல்வியிலும், ஆராய்ச்சியிலும் தமிழக முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் குறைவான கட்டணத்தில் அதிக வாய்ப்புக் கொடுத்திட வேண்டும். அதேபோல் இலங்கையின் அரபு கலாசாலைகளில் தமிழக மாணவர்கள் பயிலுவதற்கு இடவசதி அளித்திட வேண்டும்.

கேரள - தமிழக - இலங்கை பகுதி முஸ்லிம்களின் சமூகக் கலப்பும், ஒருங்கிணைப்பும் காலத்தின் கட்டாயம் அதற்கு முஸ்லிம்கள் தங்களிடமுள்ள அனைத்தையும் தானாக முன் வந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பெருமானாரின் வழியில் நின்று இறைவனுக்காக விட்டுக் கொடுக்க வேண்டும்.

அதில் அறியாமை, ஈகோ, பிராந்திய சிந்தனை, மொழிவெறி, கொள்கை வெறி, பொருளாதாரம், ஆண், பெண், மணமக்கள் என்று எல்லாவற்றையும் ஒருவர் மற்றொருவருக்கு விட்டுக் கொடுத்தால் தென்னிந்திய முஸ்லிம் சமூகம் வலிமையான சமூகமாக மாறும்.

அந்தச் சமூகம் இந்தியப் பெருங்கடல் முஸ்லிம்கள் என்று பெருமையாகப் கருதப்படும்.

இன்ஷா அல்லாஹ்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக