புதன், 7 மே, 2014

இலவசம்” இயற்கையிடமுமில்லை, ஏகனிடமும் இல்லை!

இறைமறையில், நபிவழியில் “இலவசம்” இயற்கையிடமுமில்லை, ஏகனிடமும் இல்லை! இஸ்லாத்திலுமில்லை!!

Post image for இறைமறையில், நபிவழியில் “இலவசம்” இயற்கையிடமுமில்லை, ஏகனிடமும் இல்லை! இஸ்லாத்திலுமில்லை!!0 COMMENTSin இஸ்லாம்இலவசம்” இன்று அங்கிங்கெனாதபடி பொது மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்று விட்டது. உலகளாவிய நிலையில் மக்களாட்சியில் மக்களை வசியப்படுத்தி வசப்படுத்த “இலவசம்” மிகப் பெரும் உபகரணமாக உள்ளது. எந்த அரசியல் கட்சி அதிக இலவசங்களை வாரி வழங்குகிறதோ அதற்கு தங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க மக்களும் தயாராகி விடுகின்றனர். பாவம்! இப்பாமர மக்கள் அறியாதது:- இலவச ஆசை காட்டி ஆட்சிக்கு வரும் எவரும் அவர்களது சொந்த சொத்து சுகங்களிலிருந்து இலவசம் தருவதில்லை.இந்தியாவை சுமார் 800 வருடங்கள் ஆட்சி செய்த மொளகலாய ஆட்சியில் முஸ்லிகளின் மீதுஎவ்வித சலுகையுமின்றி 2.5 சதவீதம் இஸ்லாமிய ஜகாத் வரியும், மாற்று மதத்தினரில் வசதியுள்ளவர்கள் மீது மட்டும் (அனைவர் மீதுமல்ல!) போரில் கலந்து கொள்ள வேண்டாமென்றபெரும் சலுகையுடன் ஒரு சதவீத “ஜிஸ்யா” வரியிட்டதை பெரும் அநீதமாக சரித்திர புரட்டல் செய்துள்ள இந்திய ஆட்சியாளர்கள், அடுத்து சுமார் 150 வருடங்கள் காலனி ஆதிக்கத்தில் இந்தியாவை சுரண்டி கொள்ளையடித்து தன் நாட்டிற்கு கொண்டு சென்ற ஆங்கில ஆட்சியில் உப்புக்குக்கூட வரி விதித்தற்காக “உப்பு சத்தியாகிரகம்” என விடுதலைக் குரல் கொடுத்தவர்கள் இன்றைய மக்களாட்சியில் “இலவச ஆசை காட்டி ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களான உப்பு, குடிநீர், மின்சாரம், வரிக்கும் வரி எனவும், கழிவு நீர் சுத்தம் செய்வதற்கும் வரியென நம் மீது அளவிலா வரிச் சுமைகளை சுமத்தியோ, அல்லது முழு மனித இனத்தையே பாழ்படுத்தும் மது, மாது, லாட்டரி, சூது அல்லது இவைகளனைத்தையும் கொள்முதலாகக் கொண்ட கேளிக் கூத்து போன்ற ஆட்டம், பாட்டங்கள் மூலமோ மக்களைக் கெடுத்து கிடைக்கும் பணத்தில் ஒரு சில சில்லரைகளை மக்களுக்கு இலவசமாக அளித்து அதனை தங்களின் பெரும் சேவையாகக் காட்டிக் கொள்கின்றனர். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கின்றனர். இதில் ஓரளவு இன்றைய அரசியல்வாதிகள் வெற்றியும் பெற்றுள்ளனர் என்பதை எவரும் மறுக்க முடியாது.
இலவசத்தை ஏதிர்பார்ப்பது, ஏற்பது பிச்சை எடுப்பதற்கு சமமானது. என்ற சுய மரியாதை இலக்கணத்தைக்கூட அறியா பொது மக்கள் உலகளவில் ஓரளவு இருந்தாலும் குறிப்பாக இந்தியாவில் மிக அதிகம். பொது மக்களின் அறியாமை சென்ற நூற்றாண்டு வரை ஆன்மீகவாதிகளின் மிக உயர்ந்த முதலீடாக இருந்தது. இன்றைய சமய ஆன்மீகவாதிகளுடன், மக்களாட்சியின் அரசியல்வாதிகளுக்கும் செல்வத்துடன் சேர்த்து ஆதிக்க ஆட்சிக்கு வரவும் முதலீடாகவுள்ளது. இயற்கையாக ஒரு நாட்டு மக்களின் நம்பிக்கைகள், சிந்தனைகள், உணர்வுகள், செயல்பாடுகள் பெரும்பாலும் அந்நாட்டின் சமய ஆன்மீகவாதிகளின் கைப்பிடியில் தான் உள்ளது. அதற்கு உரமிட்டு வளர்ப்பது அந்நாட்டை ஆளும் ஆட்சியதிகார அரசியல் வர்க்கம் தான் என்பதை அகில உலக சரித்திர சான்றுகள் சாட்சி பகர்கின்றன. யாசித்து, பிச்சை எடுத்து வாழ்வதையே வாழ்வாதாரமாகக் கொண்ட சமயவாதிகளை, ஏன்? கடவுளே யாசித்து, பிச்சை எடுத்து வாழ்ந்தார் என்ற அடிப்படை கொள்கைகளைக் கொண்ட இந்தியாவில் “இலவசம்” ஒரு தனி மனிதனின் சுய மரியாதை சம்பந்தப்பட்டது என்பது புத்தம் புதிய கருத்தாகும். எனவே நமது தலைப்பான “இலவசத்தை”ப் பற்றி இவ்வுலகில் வாழ அவசியமான உலகியல் ரீதியாகவும், அதனைத் தொடர்ந்து ஆன்மீக ரீதியாகவும் பார்ப்போம்.
உழைப்பின்றி உயர்வில்லை” “உழைப்பே உயர்வு தரும்” என பாலர் பள்ளி முதல் பாடம் கற்று தரும் நாம் “இலவசம்” என்பது எவ்வித உழைப்புமின்றி, அதற்கான எவ்வித முனைப்பும், முயற்சியு மின்றி கிடைக்கும் வசதிகளில் வாழ்வதாகும். அது சோம்பேறிகளின் வாழ்வாகும் என்பதை அறியாமல் இலவசத்திற்கு அடிமையாவது மிகப் பெரும் பேதமையாகும். இப்பரந்த உலகில் பகுத்தறிவுள்ள மனிதன் சுய மரியாதையுடன் கண்ணியமாக வாழ பல்வேறு வாழ்வாதாரங்களை இயற்கை நமக்கு நல்கியுள்ளதை எவரும் மறுக்க முடியாது. இதனை ஏற்பவரே ஆன்மீகவாதி. இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் எதுவுமின்றி, நிர்வாணமாக, புறத்திரையற்ற நிலையில் பிறக்கிறான். பின்பு அவன் வளர, வளர அவனது முயற்சி, உழைப்புக்கொப்ப தன்னுடைய வாழ்வாதாரங்களை சுயமாக சம்பாதித்து பெயரும், புகழுடன் வாழ முற்படுகிறான்; வாழ்கிறான். அதுவே கண்ணியமான வாழ்வாக எல்லோராலும் ஏற்கப்படுகிறது.
பிச்சை எடுத்தோ, யாசித்தோ செல்வம் சேர்த்து வாழ்பவனை சமுதாயத்தில் ஒருவரும் மதிக்க மாட்டார்கள். அவனைக் கண்டு பெரும்பாலோர் நம்மிடமும் வந்து கை ஏந்துவானே! யாசிப்பானே!! பிச்சைக் கேட்பானே! என பயந்து விரண்டோடவே செய்வர். அவனுடன் உறவு கொள்வதையோ, தொடர்பு கொள்வதையோ விரும்பவே மாட்டார்கள். அதாவது இலவசத்தை எதிர்பார்ப்பவனுக்கும், ஏற்பவனுக்கும் முழு மனித சமுதாயத்தில் அவனுக்கான சுயமரியாதை, மதிப்பு கிடைக்கவே கிடைக்காது. பின் எப்படி சுயமரியாதையுடன் அவன் இச்சமுதாயத்தில் பெயரும், புகழுடன் வாழ முடியும். இதன் மூலம் இப்பரந்த உலகில் ரீதியாக இலவசத்தை எதிர்பார்ப்பவனுக்கும், ஏற்பவனுக்கும் முழு மனித சமுதாயத்தில் மதிப்பு, மரியாதையில்லை என்பது நிதர்சனமான சத்தியம்! உண்மை!! அனைவரையும் சீர்தூக்கி, பகுத்தறிந்து சிந்திக்க வேண்டுகிறோம்.
தனிமனித சுயமரியாதை ஏகனுக்கு சொந்தமானது!
இவ்வுலகில் பிறவி எடுக்கும் ஒவ்வொரு மனிதனும் ஏகனிறைவனின் முழுமையான பிரதிநிதி என்பது இயற்கை மார்க்கம் இஸ்லாம் கூறும் சத்திய வாக்கு. (பார்க்க: அல்-குர்ஆன்: 2:30) மனிதன் ஏகனின் பிரதிநிதி என்றால் அவனது சுயமரியாதை ஏகனின் சுய மரியாதை என்பதை எவரும் மறுக்க முடியாது. இதனை திருமறைக் குர்ஆன் கூறும் பாங்கினைப் பாருங்கள்:-
இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களாநிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.  (அல்-குர்ஆன்: 4:139).அவர்கள் வர்ணிப்பதை விட்டும்கண்ணியத்தின் இரட்சகனான உம்முடைய இறைவன் தூயவன்.   (அல்-குர்ஆன்: 37:180எவன் சுயமரியாதை (இஷ்ஷத்தைகண்ணியத்தை நாடுகிறானோஅவன்,எல்லாக்கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்);தூய்மையானவாக்குகளெல்லாம்அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றனஅவன் செய்யும் சீர்திருத்த (ஸாலிஹானசெயல்களையெல்லாம்அவன் உயர்த்துகிறான். (இதன் மூலம்  அவனது கண்ணியம், சுயமரியாதை உயர்த்தப்படுகிறது  என்பது  மய்யக் கருத்து) (அல்-குர்ஆன்: 35:10).கண்ணியம் அல்லாஹ்வுக்கும்அவனுடைய தூதருக்கும்ஏகனை ஏற்றவர்களுக்கே  உரியது,எனினும்இந்நயவஞ்சர்கள் அறிந்து கொள்ளமாட்டார்கள்.  (அல்-குர்ஆன்: 68:8).நீர் கூறுவீராக! ஓ அல்லாஹ்! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ விரும்புகிறவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். நீ விரும்புகிறவரிடமிருந்து ஆட்சியை அகற்றியும் விடுகிறாய்! நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்! இழிவாக்குகிறாய்! நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. அனைத்து பொருட்களின் மீதும் நீ ஆற்றலுள்ளவன். (அல்-குர்ஆன்: 3:26)
அவர்களுடைய (விரோதமானபேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதுஅவனே (யாவற்றையும்)செவியுறுபவன்நன்கறிபவன்.  (அல்-குர்ஆன்: 10:65).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக