புதன், 8 ஆகஸ்ட், 2012

மியன்மாரில்(மறித்துக் கொண்டிருக்கும் மனசாட்சி)


மறித்துக் கொண்டிருக்கும் மனசாட்சி


மியன்மாரில் (பர்மா) கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளும் வன்முறைகளும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஏன் பெறவில்லை என்பது ஆச்சரியமான கேள்வியாகவே உள்ளது.

இதுவரை சுமார் 20,000 முஸ்லிம்கள் -குழந்தைகள்,பெண்கள் உள்ளிட்டு- பதறப் பதறப் படு கொலைசெய்யப்பட்டுள்ளனர். உண்மையில்,கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் இடம்பெயர்ந்தோர் தொகை என்பவற்றை துல்லியமாக அறிய முடியாத நிலையே தொடர்கின்றது.
சுதந்திரத்திற்குப் பின்னர் இராணுவ ஆட்சி தொடரும் மியன்மாரில்வெளிநாட்டு ஊடகங்கள் மீதான அரசாங்கத்தின் பிடி மிக இறுக்கமாக உள்ளதால் களநிலவரங்களை அறிய முடியாதுள்ளது. எனினும்இவ்வளவு கொடூரமான இனச் சுத்திகரிப்பு ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக நடைபெற்று வருகின்ற போதும்நியூயோர்க் டைம்ஸ்வொஷிங்டன் போஸ்ட்பி.பி.சி. அல்லது ரொய்டரில் இந்தச் செய்திகள் எதுவும் பிரதானப் படுத்தப்படவில்லை. அறபு இஸ்லாமிய ஊடகங்களிலும் மியன்மார் முஸ்லிம்கள் பற்றிய தகவல்கள் போதியளவு வெளியாகவில்லை.
கடந்த ஜூன் 03 இல் 11 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தொடங்கிய வன்முறைகள் இன்னும் ஓயவில்லை. மியன்மார் இராணுவ அதிகாரிகளே முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு நேரடியாகத் துணை போகின்றனர்.
"உலகிலேயே மிகவும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் சிறுபான்மைச் சமூகம் மியன்மார் முஸ்லிம்களே" என்று அறிக்கை விட்டதோடு ஐ.நா. அமைதி காக்கின்றது. மியன்மாரில் நடை பெற்றுவரும் மயிர் கூச்செறியும் குரூரமான இனப்படுகொலை மனித உரிமை பற்றிய பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மியன்மார் முஸ்லிம்கள் பற்றிய ஓர் தெளிவான வரைபடத்தைப் புரிந்துகொள்ளாமல்இன்று நடைபெறும் வன்முறைகளைப் புரிந்துகொள்ள முடியாது.
கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் பர்மாவில் இஸ்லாம் அறிமுகமாகியது. இந்தியாசீனா,பங்களாதேஷ்தாய்லாந்துமலேஷியா ஆகிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள்10 ஆம் நூற்றாண்டில் பெருமளவு பர்மாவுக்கு இடம்பெயர்ந்தனர். இவர்களின் கூட்டுக் கலவையே இன்றைய மியன்மார் முஸ்லிம் சமூகம்.
சுமார் 360 இற்கும் மேற்பட்ட இனக் குழுமங்களைக் கொண்டுள்ள பர்மிய சமூகத்தில்மூன்று பிரதான மாகாணங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றனர். தெற்கில் பான்தாய் எனப்படும் இனக்குழுமத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பூர்வீக பர்மிய முஸ்லிம்கள் எனக் கருதப்படுகின்றனர்.
தன்னசெரில் மாகாணத்தில் பஷூஷ் எனப்படும் குழுமத்தினர் வாழ்கின்றனர். இவர்கள் சீன மற்றும் தாய்லாந்து பூர்வீகத்தைக் கொண்டுள்ளனர். மேற்கு மாகாணமான அரகானில் வாழ்கின்ற ரோஹிங்யோ எனப்படும் முஸ்லிம்கள் மீதே தற்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. இவர்கள் 11 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து மியன்மாருக்குக் குடிபெயர்ந்த முஸ்லிம்கள் ஆவர். இவர்களில் சிறு தொகையினர் பங்களாதேஷை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
தேரவாத பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியன்மாரில்மொத்தமாக 60மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் 5 வீதமானவர்கள் முஸ்லிம்கள் என மியன்மார் அரசாங்க தொகை மதிப்பு தெரிவிக்கின்றது. எனினும்ரோஹிங்யா முஸ்லிம்கள் இம்மதிப்பீட்டில் உள்ளடக்கப்படவில்லை. அவர்கள் மியன்மாரில் வாழும் வெளி நாட்டவர்கள் என்றே அரசாங்கம் கூறிவருகின்றது.
இதன் விளைவாக ஒரு நாட்டின் சராசரிப் பிரஜைக்கு உள்ள உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. பாடசாலை மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் ஒதுக்கப்பட்டுள்ள இவர்கள்அடிமட்ட தொழில்களை மாத்திரமே செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகின்றனர்.
முஸ்லிம் சிறுவர்களும் கடின உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுதந்திர நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இவர்களின் சொத்துக்கள் அவ்வப்போது வெவ்வேறு பெயர்களில் பறிமுதல் செய்யப்படுகின்றன. இவர்கள் வாழும் நிலங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளதோடு,இது வரை இவர்களுக்கு தேசிய அடையாள அட்டையும் வழங்கப்படவில்லை.
மணம் முடிப்பதற்கு அரசாங்க அனுமதி கண்டிப்பாகப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. அவ்வாறு அரச அனுமதி பெற்று நடைபெறும் திருமணங்களினூடாக ஆகக் கூடியது இரண்டு பிள்ளைகளே பெற்றுக் கொள்ளலாம் என்ற சட்டம் இறுக்கமாக நடைமுறையில் உள்ளது.

பௌத்த பெண் ஒருவரை வல்லுறவுக்கு உள்ளாக்கினர் என்று குற்றம் சுமத்தப்பட்டே பஸ்ஸில் சென்ற 11 பேர் இறக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதோடுசமீபத்திய வன்முறைகள் தொடங்கின. ஆயினும்,முஸ்லிம்கள் மீதான மியன்மாரின் அரச பயங்கரவாதத்திற்கு கடந்த 1000 ஆண்டுகால வரலாறு சாட்சியாக உள்ளது.
Glass Palace Chronicle எனப்படும் மியன்மாரின் பூர்வீக வரலாற்று நூலின்படி1050 களிலேயே செறிவான முஸ்லிம் குடியிருப்புகள் மியன்மாரில் இருந்தன. இந்திய பூர்வீக முஸ்லிம்கள் மீதான இத்தகைய இனப் பாகுபாட்டிற்கும் படுகொலைக்கும் காரணம் என்ன என்பது பற்றி பல்வேறு விதமான அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மொகலாய மன்னர் ஷாஜஹானின் இரண்டாவது மகன் ஷாஹ் சுஜா என்பவர் ஒரு கட்டத்தில் மியன்மாருக்குக் குடிபெயர்ந்தார். மிகுந்த சொத்துக்களுக்குச் சொந்தக்காரரான அவரை அந்நாட்டில் வந்து குடியேறுமாறு அழைப்பு விடுத்த சந்தாது தாமா எனும் மன்னன் அவரது சொத்துக்களையும் பெண் பிள்ளைகளையும் தனக்கு வழங்குமாறு வேண்டியதாகவும் சுஜா அதற்கு மறுப்புத் தெரிவித்தபோது பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுபட்டினியால் கொல்லப்பட்டதோடு,இந்தியாவிலிருந்து வரும் முஸ்லிம்கள் மியன்மாரில் குடியேறாதவாறு தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் வந்த பய்யின் நுஆன்ஆடுகோழி போன்ற இறைச்சி வகையினை முஸ்லிம்கள் ஹலாலான முறையில் உண்பதைத் தடைசெய்தான். இவனது ஆட்சியில் சகிப்புத் தன்மை மண்ணளவும் இருக்கவில்லை. பலர் பலாத்காரமாக பௌத்தத்திற்கு மதம் மாற்றப்பட்டனர். 1750இல் அரியணை ஏறிய அலோங்பாயாவின் ஆட்சியிலும் முஸ்லிம்கள் கடும் சோதனைகளை எதிர் கொண்டனர்.
1782 இல் அரியணை ஏறிய போ தௌபாயா மன்னனின் ஆட்சியில் முஸ்லிம்கள் பன்றி இறைச்சியை உண்ணுமாறு வற்புறுத்தப்பட்டனர். மறுத்தவர்கள் கொலை செய்யப்பட்டனர். ரங் கூனில் நீதிபதியாக இருந்த மௌரிஸ் கொலிஸ் எனும் ஆங்கிலேயர் இது குறித்து பதிவுசெய்துள்ளார். பர்மாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்றுப் பகைமையும் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைக்கு பின்னணியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
1930 களில் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு கலவரங்கள் நடந்தன. 1948 இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் அடைந்த மியன்மாரில் 1976, 1991, 1997, 2001 ஆகிய ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகளும் வன்முறைகளும் மிகவும் குரூரமானவை. 1978 இல் நடைபெற்ற இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின்போது பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் மியன்மாரை விட்டுத் தப்பியோடினர்.
தற்போதுஅரகான் மாகாணத்தில் 800,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்களில் சுமார் 300,000 பேர் பங்களாதேஷுக்கும் 24,000 பேர் மலேசியாவுக்கும் அகதிகளாக வெளியேறிச் சென்றுள்ளனர். கடல் மார்க்கமாக வெளியேறிச் செல்லும் அகதிகளின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதென்று மனித உரிமை நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் வாழும் முஸ்லிம்கள் மீதான இத்தகைய இனச் சுத்திகரிப்பும் படுகொலையும் நன்கு திட்டமிடப்பட்டே மேற்கொள்ளப்படுகின்றன என்பதை சுதந்திரத்திற்குப் பிந்திய 6தசாப்தங்களும் தெளிவாக உணர்த்துகின்றன. தற்போதைய வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதோடுமுஸ்லிம்களுக்குச் சொந்தமான இலட்சக்கணக்கான வீடு தீக்கிரையாக் கப்பட்டுள்ளன. பள்ளிவாயல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக இவ்வளவு கொடூரமான வன்முறைகளும் பயங்கரமும் கட்டவிழ்க்கப்படுகின்ற நிலையில்,சர்வதேச சமூகம் காத்து வரும் மௌனம் பேரதிர்ச்சியைத் தருகின்றது. மனித உரிமை நிறுவனங்களும் உருப்படியான வேலைத்திட்டம் எதனையும் மேற்கொள்ளவில்லை. மியன்மார் அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தமும் இதுவரை இடம்பெறாமை குறித்து கவலை வெளியிடப்படுகின்றது.
சுமார் ஒரு மில்லியன் மக்கள் ஆயுததாரிகளாலும் வன்முறையாளர்களாலும் முற்றுகையிடப்பட்டுமரண அச்சத்தில் உரைந்து போயுள்ள நிலையில், 1991 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவியான ஆங் சான் சூகி கூட இவ்வன்முறைகள் குறித்து ஒரு வார்த்தையேனும் பேசாமல் இருப்பது அவரது ஜனநாயக நிலைப்பாடு குறித்த ஐயத்தை எழுப்புகின்றது.
சுதந்திரத்திற்குப் பின்னர் மாறி மாறி அதிகாரத்திற்கு வந்த இராணுவ இயந்திரத்தின் கீழ் முஸ்லிம் சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். காஷ்மீரில் இந்தியா கைக்கொள்ளும் அதே கபடத்தனமான போக்கையே மியன்மாரில் இராணுவக் குண்டர்கள் கைக்கொண்டு வருகின்றனர். மேலைய நாடுகளின் ஊடகங்களை மட்டுமல்லஅவர்களது மனச்சாட்சியையேனும் இன்னும் இந்நிகழ்வுகள் உலுப்ப வில்லை என்பது ஆச்சரியமான கேள்வியாகவே எழுகின்றது.
மியன்மாரின் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள இனச்சுத்திகரிப்பை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமாயின்ஐ.நா. அதில் தீவிரமாக தலையீடு செய்ய வேண்டியுள்ளது. அறபு நாடுகளும் இதற்கான அழுத்தத்தை வழங்க வேண்டியுள்ளது. நீடித்த மௌனம் ஒட்டுமொத்த அழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதை மனித உரிமை நிறுவனங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

1 கருத்து: